ஞாயிறு, 4 ஜூலை, 2010

தமிழீழக்கனவுடன் தம்மையே ஆகுதியாக்கிய எம் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

மனதிலே விடுதலையை சும்ந்தவர்கள்!
...எரிமலையாய் தடை உடைத்த கந்தக பூக்கள்!
புயலாய் சுழன்றடித்த் தென்றல்கள்!....................


இவர்களோடு பழகிய கணங்களை நினைத்து பார்க்கிறேன்.அற்புதமாய்,வரமாய்,கிடைக்கின்ற ஞானிகளின் தரிசனங்களின் பேறாய் இவர்களின் வரவுகள் இருக்கும்.
எரிமலையாய் வாழ்ந்த இவ் உள்ளங்களில்தான் எத்தனையோ நெகிழ்ச்சிகள்,துன்பங்கள்,இன்பங்கள்,காதல்கள்,துயரங்கள் அதற்கு மேலாய் தாயகத்தை நேசித்தார்கள்.
தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற தம் உடல்களிலேயே கந்தகவெடி சுமந்தவர்கள்.
நவநாகரீகமாக,சுகபோகமாக,சுயமாக,எதிரியின் குகைகளில் வாழ்ந்த போதும் தடை உடைத்து வ்ழி சமைத்தவர்கள்.அலைபாயும் மனவுலகில் புதுமைகளையும்,
ஆசைகளையும் மனதில் தேக்கி நிற்கும் இளவயதில் தாயகத்தை,மண்ணின் துயரத்தை மனதில் சுமந்த வ்ல்லவர்கள்.
காதலனிற்கு காதலியாய்,காதலிக்கு காதலனாய்,உறவுகளிற்கு உயிராய் உணர்வுகள் மிளிர்ந்தபோதும் தேசத்தின் தடை உடைப்பே இவர்களின் இலட்சியமானது.


தமது இலக்கு எய்தும்வரை அக்குறிக்கோளே வாழ்வாக வரிந்து கொண்டவர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக