வெள்ளி, 9 ஏப்ரல், 2010

தோல்விகண்ட முன்னாள் நாடாளுமன்ற பிரபலங்கல்

அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது. பேரியல் அஷ்ரப் நுஆ என்றழைக்கப்படும் தேசிய ஐக்கிய முன்னணிக்கட்சியின் முன்னாள் தலைவியாவார். நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இவர் இணைந்துகொண்டார். பேரியல் அஷ்ரபுடன் இணைந்து சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சம்மாந்துறை ஏ.எம்.எம். நௌஷாத்தும் இத்தேர்தலில் தோல்விகண்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தெரிவாகி ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எச்.அமீர் அலி, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவான தங்கேஸ்வரி கதிர்காமர் ஆகியோர் இம் முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை. கடந்ததேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு இம்முறை தமிழ்க் காங்கிரசில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கNஐந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், மற்றும் இடதுசாரி முன்னணியில் போட்டியிட்ட எம்.சிவாஜிலிங்கம், சிறீகாந்தா ஆகியோரும் தோல்வி அடைந்துள்ளனர். இவை தவிர ஐக்கியதேசியக் கட்சி மற்றும் ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சிகளில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்த பலர் இம்முறை தோல்விஅடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் மலையகத்தில் வடிவேல்சுரேஸ், சச்சிதானந்தன் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. இவை தவிர நாளை விருப்புவாக்குகள் வெளியாகிய பின்பே தோல்வியடைந்த ஏனைய பிரபல்யங்கள் குறித்து தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக