திங்கள், 17 ஜனவரி, 2011

இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை .கனடா அரசாங்கம்

கனடாவுக்கு செல்லவுள்ளதாக கூறப்படும் மேலும் 400 இலங்கை அகதிகளின் வருகையை தடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டாவா சிட்டிசன் பத்திரிகை, கனேடிய அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தென் கிழக்காசிய நாடு ஒன்றில் இரண்டு இரண்டு தனித்தனி கப்பல்கள் மூலம் 400 தமிழ் அகதிகள் வரையில் கனடா நோக்கி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தடுப்பது குறித்து தற்போதே கனடா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இது தொடர்பில் கனடா அரசாங்கத்தினால் சொற்ப அளவிலான நடவடிக்கையே மேற்கொள்ள முடியும் என, கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் 500 தமிழ் அகதிகள் கனடா சென்றதைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசாங்கம் துரிதமாக கனடாவுக்கு ஆதரவாக செயற்பட்டது.
அதன் பின்னர் நூற்றுக் கணக்கான தமிழ் அகதிகள் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் தொடர்ந்து தாய்லாந்து அரசாங்கம் கனடாவுக்கு உதவும் என எதிர்பார்க்க முடியாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து அரசாங்கம் அதிகள அளவில் தமிழ் அகதிகளை தடுத்து வைத்திருக்கவும், விடுதலைப் புலிகளின் தளங்கள் அங்கு உருவாவதையும் விரும்பவில்லi என கனேடிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அகதியாக செல்பவர்களை கண்காணிக்குமே தவிர, கைது செய்யவோ, அகதி கப்பலை தடுக்கவோ தாய்லாந்து முன்வராது என அவர் குறிப்பிட்டுள்ளார். ந்த நிலையில் குறித்த அகதி கப்பல்களை கனேடிய அரசாங்கத்தினால் தடுக்க முடியாத நிலை ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக