வெள்ளி, 3 செப்டம்பர், 2010

1500 இராணுவத்தை கொன்றவன் அமைச்சர்,, முதலமைச்சர்,, ஆயுதம் கடத்தியவன் விருந்தாளி .ஆனால் நானோ கைதி.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறு வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 50 வயதுடைய ஒரு தமிழ்க் கைதி சிங்கள நீதிபதியைப் பார்த்து நியாயமான ஒரு கேள்வியை எவ்வித அச்சமுமின்றி கேட்டுள்ளார். அந்த கேள்வி அந்த சிங்கள நீதிபதியை சற்று செவி சாய்க்க வைத்துள்ளது என்றே நாம் கூறவேண்டும்.


அந்த துணிச்சலான தமிழ்க்கைதி நீதிபதியைப் பார்த்து “விடுதலைப் புலிகளின் முக்கிய பங்காளிகளாக விளங்கிய கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி (குமரன் பத்மநாதன்) ஆகியோர் தற்போது இலங்கை அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கும் செல்லப்பிள்ளைகளாக உள்ளார்கள். ஆனால் ஒரு குற்றமும் செய்யாத தமிழர்களாகிய நாங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக கொடிய சிறைகளில் ஏன் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றோம்? என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக