வெள்ளி, 3 செப்டம்பர், 2010

மீள்குடியேறியும் ...............

வவுனியா புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து விடுதலையான ஊனமுற்ற விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒரு சாரார் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.கடந்த ஏப்ரில் மாதம் முதல் வாரத்தில் தாங்கள் விடுதலை செய்யப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போதிலும், வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் தங்களுக்கு உறுதிவழங்கப்பட்ட உதவிகள் கிடைக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் இவர்களில் சிலர் கூறுகின்றார்கள்.


பல்வேறு தன்னார்வ தொண்டர் அமைப்புகள் தங்களைச் சந்தித்து வாழ்வாதாரம் தொடர்பாக விபரங்களை கேட்டறிந்துள்ள போதிலும், எந்தவொரு நிறுவனமும் தங்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் வாயப்புகளை ஏற்படுத்தித் தரவில்லை என சிவலிங்கம் பரமநாதன் என்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கூறுகின்றார். விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் தனது குடும்பம் மனைவியின் உறவினர்களுடைய பராமரிப்பிலேயே இருந்ததாகக் கூறும் பொன்னுத்துரை புவனேந்திரநாதன், தனது குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி மனைவியை மலேசியாவிற்கு வேலை பார்க்க அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக கவலையுடன் கூறுகின்றார். இவர்களுடன் விடுதலை செய்யப்டப்ட சிலருக்கு தன்னார்வ தொண்டர் அமைப்புகள் ஊடாக வாழ்வாரத்திற்கான சுய தொழில் வாயப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டாலும் அவற்றை நிரந்தர தொழில் வாயப்பாக கருத முடியாது என்று அவர்களில் பலர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக