வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஒன்றுபட்டு முறியடிப்போம்!!!

இலங்கை இனவெறி அரசு புரிந்த போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு தெரிந்த பிறகு பல்வேறு நெருக்கடிகள் ராஜபக்சே அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பல்வேறு சலுகைகளை ரத்து செய்துவிட்டன. ஐநா மன்றம் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.



கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கை அரசு இந்தியா,சீனா போன்ற நாடுகள் உதவியுடன் போர்க்குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.


முதல் முயற்சியாக இலங்கையில் இந்திய திரைப்பட விழாவை நடத்தியது ராஜபக்சே அரசு. இதை முக்கியமானவர்கள் புறக்கணித்ததால் முயற்சி தோல்வியில் முடிந்தது.


இதைத்தொடர்ந்து 2வது கட்டமுயற்சியாக கொழும்பு நகரில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தும் முயற்சியில் சிங்கள இனவெறி அரசு ஈடுபட்டு வருகிறது. ஜனவரி 5,6,7,8 ஆகிய தேதியில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


உலகம் முழுவது ம் இருந்து தமிழ் எழுத்தாளர்களை இம்மாநாட்டிற்கு வரவழைத்து அதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தையும், போர்க்குற்றத்தையும் மறப்பகுதிக்கு திட்டமிட்டுள்ளனர்.


ராஜபக்சேவின் இத்திட்டம் குறித்த தகவல் வெளியானதும் சர்வதேச அளவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் சங்கங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து தமிழ் எழுத்தாளர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆகவே, அனைத்து தமிழ் எழுத்தாளர்களும் இக் கோரிக்கையினை ஏற்று சிங்கள இனவாத அரசினுடைய 2வது இம் முயற்சியையும் ஒன்றுபட்டு முறியடிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக