ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கடற்படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்ளே காணாமல் போயுள்ளனர்..

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிக எண்ணிக்கையானோர் கடற்படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் காணாடல் போனவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டும் நிகழ்வொன்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை வவுனியா வன்முறையற்ற சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது வவுனியா மனித உரிமைகள் ஆணையாளர் ரோகிதவும் வருகை தந்து மக்களுடன் உரையாடினார் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிகமானோர் கடற்படையினரால் அழைத்துச் சென்றவர்களே என்றும் அவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும் உறவினர்கள் இந்நிகழ்வின் போது தெரிவித்தனர். கடந்த 2வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் 150க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக