ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

வடக்குக்கிழக்கு பகுதிகளுக்கு பொலிஸ் அதிகாரம் இல்லை

அண்மையில் டில்லியில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத்காரிய வசம், வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார். இக் கருத்துத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன், பிரசாத் காரியவசம் அவர்களின் இந்த கருத்து கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ள அவர், பல நெடுங்காலமாக சிங்கள தலைமைகள் மத்தியில், தமிழ் மக்களுக்கு பொலிஸ், காணிஅதிகாரங்கள் மாத்திரமின்றி எந்த அதிகாரத்தையும் வழங்கக் கூடாது என்ற கொடுங்கோல் எண்ணம் இருந்து வந்தது. கடந்த 62 வருடங்களாக இந்த நிலைமையே தொடர்கிறது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மத்தி யில் இன்னமும் தமக்கு அதிகார பகிர்வு வழங்கப்படும் என்ற நம்பிக்கையும், அபிலாசையும் காணப்படுகின்றது.இந்தியாவின் ஆதரவுடன் நடை முறைக்கு வந்த 13ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்டத்தின் கீழ் உள் வாங்கப்பட்ட வடக்குக் கிழக்கு இணைப்பு துண்டாடப்பட்டு எந்த அதிகாரமும் வழங்கப்படாத வகையில் தமிழ் மக்கள் அதிகாரம் இன்றி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எத்தனை காலத் திற்கு தமது மக்கள் அதிகாரம் வழங்கு வார்கள் என்ற நம்பிக்கையில் இலவு காத்த கிளியாக வாழ முடியும் எனவும் அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக