சனி, 4 டிசம்பர், 2010

நான் உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்காரர்களையும் இலங்கைக்கு அழைக்கிறேன்!!!!!-அமைச்சர் மேர்வின்

மஹிந்த சிந்தனை தொடர்பில் பாடம் படிக்க உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்காரர்களையும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, வெள்ளைக்காரர்களுக்கு பாடம் புகட்ட தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

பெஹலியகொடவில் இன்று இடம்பெற்ற கலாநிதி மேர்வின் சில்வா கிண்ணத்திற்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேர்வின் சில்வா சைக்கிள் செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு உரையாற்றியதாவது,
அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சைக்கிள் செலுத்துவது நல்லது காரணம் அது உடம்புக்குப் புத்துணர்ச்சி தரும். அதனால் அரசியல்வாதிகள் பெரிய வாகனங்களில் செல்லத் தேவையில்லை. தயவுசெய்து சைக்கிள் ஒன்று வாங்குங்கள், இப்போது தீவிரவாதம் நிறைவடைந்துள்ளது. நாடு அமைதியாக உள்ளது. எந்த பயணத்தையும் சைக்கிளில் மேற்கொள்ள முடியும்.
நான் வெள்ளைக்காரர்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். பணம்பெற்றுக் கொண்டு புலிகளுக்கு பந்தம் பிடிக்கும் இங்கிலாந்து வெள்ளைக்காரர்கள், இங்கிலாந்துக்கு சமாதானத்தை பாதுகாக்கத் தெரியாவிட்டால், இங்கிலாந்துக்கு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் நாட்டிற்கு வந்தால் அவருடைய கடமையை முடிப்பதற்கு உதவிசெய்யத் தெரியாவிட்டால், வெள்ளைக்காரர்களின் மூத்தவர்களிலிருந்து அனைவரையும் அழைக்கிறேன் இலங்கைக்கு.
நீங்கள் எந்த நேரத்திலும் வாருங்கள், நீங்கள் வந்த வேலையை முடித்துக் கொண்டு வந்தது போன்றே செல்ல முடியும். நான் உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்காரர்களையும் இலங்கைக்கு அழைக்கிறேன், இங்கு வகுப்பு நடத்தி மஹிந்த சிந்தனையில் உள்ளது போன்று முன்னோக்கிச் செல்ல.
அதேபோன்று டொக்டர் ஜயலத்துக்கும் நான் எச்சரிக்கிறேன். நாட்டிற்கு துரோகம் செய்யாமல் நாட்டைக் காட்டிக் கொடுக்காமல் அரசியல் செய்ய முடியாவிடின் நாட்டில் ஒழிந்துக் கொள்ள கல்குகை ஒன்றுகூட கிடைக்காது.
இது பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் உயிரை கொடுத்து மீட்டெடுத்த நாடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இதை செய்ததே போதுமானது. இந்த நாட்டை யாரும் காட்டி கொடுக்க நினைக்கக் கூடாது.
பாராளுமன்றில் நடைபெற்றதை நான் நூற்றுக்கு நூற்று வீதம் அனுமதிக்கிறேன். அந்த சமயத்தில் நான் பாராளுமன்றில் இருக்காததை இட்டு கவலையும் அடைகிறேன்.
நான் பாராளுமன்றிற்கு வருவதற்கு முன்னர் எனது நண்பர் ஜயலத் ஜயவர்த்தனவை, ராஜசிங்க மன்னன் ஓடியது போன்று நாட்டிற்கு நன்றி எனக் கூறி கப்பலில் ஏறி செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அவருக்கு மட்டுமல்ல நாட்டைக் காட்டிக் கொடுக்க நினைக்கும் ஜே.வி.பி, ஐ.தே.க மற்றும் பொன்சேகாவிற்கும் கூறுகிறேன். துரோகிகளே நீங்கள் அனைவரும் நாட்டை விட்டு செல்லுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக