வியாழன், 22 ஜூலை, 2010

கிளியில்..இராசநாயகம் புதிய இராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் ....

கிளி முன்னாள் அதிபரும் தற்போதைய வடமாகாண ஆளுனர் சந்திரசிறியின் பதில் செயலாருமான இராச நாயகம் சமூக சேவை அமைச்சின் கீழ் கிளியில் உள்ள பொதுக்காணிகளை எடுத்து பண்ணைத்திட்டம் செய்யப்போவதாக அங்கிருப்போரை விரட்டி வருகின்றார்.



கிளி மாவட்டத்தில் காணிகள் இல்லாதோர் மற்றும் ஊனமுற்ற போராளிகுடும்பங்களிற்கு பொதுக்காணிகளை விடுதலைப்புலிகளின் அப்போதைய நிர்வாகப்பிரிவு கேட்டதற்கு அமைய இவரே வழங்கி இருந்தார். 05 வருடத்தின் பின்னர் பேர்மிற் தருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போ அங்கு மீழ் குடியேறியுள்ள மக்களை விரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.


அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு கிளியில் வந்து தனக்கு வழங்கப்பட்ட காணியில் குடியேறியுள்ள ஒரு கால் இல்லாத போராளி குடும்பத்திற்கும் இதே நிலைதான்.


கிளி நகரத்தை சுற்றியுள்ள பொதுக்காணிகளை இவ்வாறு பண்ணைத்திட்டத்திற்கு என சுவீகரித்து யாருக்கு கொடுக்கப்போகின்றார் என்பதே அடுத்த கேள்வி.


வெளியேறச்சொன்னவர்களுக்கு ஆனந்தபுரம் பகுதியில் காணி தருவதாக கூறுகின்றாராம் ஆனால் அதற்கான எந்தவேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கவில்லை என்றும் கூடவே அங்கு இராணுவத்தினர் பெரும் கட்டுமானங்களை செய்வதனால் அங்கு செல்ல முடியாது என மக்கள் கூற்உகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக