புதன், 12 ஜனவரி, 2011

மழை மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள்:பத்து லட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பத்து லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதுவெளியாகியுள்ளதகவல்கள்தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மணிக்கு மணி அகதிகளுக்கான முகாம்களின் தேவை அதிகரித்து வருகின்றது என்று இலங்கை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.அங்கு பால், குழந்தைகளுக்கான உணவு, கொசு வலைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுக்கான உடனடி தேவை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் பல இடங்களில் பற்றாக்குறையாக உள்ளது.கிண்ணியாப் பகுதியில் வெள்ள நிலைமை சாலைகள் நதிகளை போல காட்சியளிக்கின்றன எனவும், நெல் சாகுபடி செய்யப்படும் வயல்கள் பெருமளவில் அழிந்து போயுள்ளன என்றும் அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். கடந்த பல நாட்களாக இலங்கையில் பெயது வரும் பலத்த மழையின் காரணமாக இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.
 மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவடவெள்ளத்தில் மூழ்கியிருக்கும் ரயில் பாதைகள்
இம்மாவட்டங்களில் பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மீது மூன்று அடிக்கும் அதிகமான அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதாக பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
அம்பாறையில் வெள்ளத்தின் தாக்கம் உதவிகள் வந்து சேரவில்லை எனப் புகார் இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு அரசின் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்கிற புகார்களும் எழுந்துள்ளன.
அரசின் நிவாரணங்களோ அல்லது உதவி நிறுவனங்களின் உதவிகளோ வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் பலர் கூறுகிறார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து பள்ளிகள் மற்றும் இதர முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றியும் நீர் பெரிய அளவுக்கு தேங்கியுள்ளதால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உலர் உணவுகள், படுக்கை விரிப்புகள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்கி உதவுமாறு இலங்கை அரசு ஒரு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
எனினும் சில பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரும் உணவும் அரசு மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக