செவ்வாய், 18 ஜனவரி, 2011

வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை

வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றபோதும் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அந்தப்பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றுதெரிவிக்கப்படுகின்றது.வலி.வடக்கு பிரதேசங்க ளில் மக்களை மீளக்குடிய மர்த்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக வித்தகபுரம், இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு ஆகிய கிராமங்களில்மக்கள் மீளக்குடிய மர்த்தப்பட்டனர்.இதன் அடுத்தகட்டமாக வயாவிளான் கிழக்குப்பகுதி மக்கள் தம்மை மீளக்குடியமர்த்து மாறு கோரி அரச அதிபருக்கு மகஜர் கையளித்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கான கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் பெறப்பட்டது.கடந்த 3 ஆம் திகதி கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் மிதிவெடி செயற்பாட்டு அலுவலகத்தினரால் அரசஅதிபரிடம் கையளிக்கப்பட்டது.இருப்பினும் அந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்த்துவதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாகவே அந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்துவதில் தாமதம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை கண்ணிவெடி அகற்றப்பட்டாமையினாலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமடைவதாகவும் கண்ணிவெடி அகற்றும் பணி நிறைவு பெற்றால் மக்களை மீளக்குடியமர்த்த முடியும் என்று யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக