புதன், 9 ஜூன், 2010

13 ஆவது திருத்த சட்டத்தை குப்பையில் போடவேண்டும்!!

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்பதாக 13ஆவது திருத்த சட்டமூலத்தை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்து விட்டு தேர்தல் முறைமையை முற்றாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சிங்களப் பெரும்பான்மை இனத்துக்கு சொந்தமான நாடாகும். எனவே எமது நாட்டில் அரசியலமைப்பு தொடர்பில் ஆலோசனை தெரிவிக்க இந்தியாவுக்கு அருகதையில்லை என்றும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள “சவ் சிறிபாய’ கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.


இங்கு உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் கூறியதாவது, எமது நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து பல்வேறு விதத்திலும் அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகித்து அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.


13 ஆவது திருத்தமானது இந்தியாவினால் எம்மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டதாகும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.


அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டுமென்ற இந்தியாவின் அழுத்தத்திற்கு எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பிலும் இதுவரையில் எதுவிதமான உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேவேளை அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசாங்கம் கூறி வருகிறது.


இந்த அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்பதாக 13 ஆவது திருத்தத்தை குப்பைத் தொட்டியில் தூக்கியெறியவேண்டும்.


அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள கோமாளித்தனமான தேர்தல் முறைமையை முற்றாக மாற்றியமைக்க வேண்டும். இதற்கு ஜனாதிபதி முன்னுரிமை வழங்க வேண் டும். அதை விடுத்து இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியலாகாது.


எமது நாட்டை இந்தியாவின் காலனித்து வமாக்கி பொருளாதாரத்தை தமது கையிலெடுப்பதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.


இன்று எமது நாட்டுக்குள் 30,000 தென்னிந்தியர்கள் வசிக்கின்றனர். அத்தோடு இங்கு தமிழ்க் கல்வியை கற்பிப்பதற்காக அங்கிருந்து 500 ஆசிரியர்கள் வரவுள்ளனர். இவையெல்லாம் எம்மை ஆக்கிரமிப்பதற்கான வியூகங்களாகும். ஏன் எமது நாட்டில் தமிழ் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லையா?


தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்த புலிகளின் “வாலா’க செயற்பட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைகள் அவசியமற்றவை. அதேவேளை இப்பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரனின் கோரிக்கைகளை நிறைவேற்ற தாம் தயாரில்லை எனத் தெரிவித்திருக்கின்றார். இதனை வரவேற்கின் றோம்.


அதேபோன்று இந்தியாவிலும் அச்சுறுத்தல்களுக்கு பயப்படாது முகம் கொடுக்க வேண்டும். இங்கு உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார கூறியதாவது, “சீபா’ உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்னவென்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமோ - இந் திய அரசாங்கமோ இதுவரையில் வாய் திறக்கவில்லை.


இது தொடர்பில் எமது கடுமையான எதிர ப்பை தெவித்துக் கொள்கிறோம். ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிராகக்கப்பட்டது. இதற்கு சீனாவும் ரஷ்யாவும் ஆதரவு வழங்கின. இவ்வாறானதோர் நிலையில் மீண்டும் எமது நாட்டுக்கு எதிரான பிரேரணையை தனது சொந்தப் பிரேரணையாகக் கொண்டு வருவதற்கு ஐ. நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையானது வெட்கப்பட வேண்டியதாகும். இந்தளவிற்கு ஐ.நா.வின் தரம் கீழிறங்கியுள்ளது.


இவ்வாறான நடவடிக்கைகளால் எம்மை அடிமைப்படுத்த மேற்குலகம் முயற்சிக்கையில் சீபா உடன்படிக்கை மூலம் எமது நாட்டை முழுமையாக பொருளாதார ரீதியில் ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிகளை மும்ரமாக மேற்கொண்டு வருகிறது.


இதற்கு எமது நாட்டிலுள்ள சில அரச அதிகாரிகளும் துணை போகின்றனர். இந்த உடன்படிக்கை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதென ஜனாதிபதி கூறியுள் ளார். இவ்வாறான கருத்தை கூறி அவரால் நழுவ முடியாது.


பத்து வருடங்களுக்கு முன்பதாக இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. ஆனால், அதன் மூலம் இந்தியாவிற்கே அதிக நன்மைகள் கிடைத்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக