செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கீரிமலை தீர்த்தக் கேணிக்கு “தம்பல பட்டுணவ”

வரலாற்றுப் புகழ் பெற்ற கீரிமலை தீர்த்தக் கேணிக்கு "தம்பல பட்டுணவ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குதிரை முகம் கொண்ட மன்னன் மகளின் பிணியறுத்து முக அழகை கொடுத்த வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டபுரம் கீரிமலை தீர்த்த கேணிக்கு சிங்களவர்களால் பெயர்பலகைசூட்டப்பட்டுள்ளது.
மாவிட்டபுரம் கீரிமலை தீர்த்தக் கேணியில் இந்துக்கள் வரலாற்று ரீதியாக மிகத் தொன்மையான காலம் தொட்டு தமது பிரிந்த உறவுகளுக்காக பிதிர்க்கடன் செலுத்தி வந்திருக்கின்றனர்.பத்து ஆண்டுகளுக்கு மேலாக குறித்த பகுதி அதிஉயர் பாதுகாப்புவலயமாக அறிவிக்கப்பட்டு மக்கள் போக்குவரத்திற்கு முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் அண்மையில் அங்கு செல்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்து.
 மக்கள் அற்ற நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இவ்விடம் தற்போது பெருமளவிலான தென்பகுதி உல்லாசப் பயணிகளை வரவழைக்கும் இடமாக இருக்கின்றது. தற்போது மீண்டும்  மக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,,மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் நீராடுவதை படையினர் தொடர்ந்தும் நேரடியாகவே பார்வையிடுகின்றனர். இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல. இதனைவிடவும் தீர்த்தக் கேணி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் நீராடுவதற்கு ஏற்றவகையில் முன்னர் அமைக்கப்பட்டிருந்தது.
 . இத் தீர்த்தகேணிக்கு சிங்கள மொழி பெயர்ப்பில் “தம்பல பட்டுணவ” எனப் பெயர்பலகை சிங்களத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சென்று திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர். இனி தங்களது பெயர்களிலும் மாற்றங்கள் கொண்டு வரலாம் என்றும் வேறு என்ன என்ன பெயர்கள் எல்லாம்  மாறப் போகின்றதோ என்று மக்கள் ஏக்கம் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக