திங்கள், 13 செப்டம்பர், 2010

உங்கள் கண்டனங்களை குப்பையில் கொட்டுங்கள்

இலங்கையின் அரசியலமைப்பின் 18 - வது திருத்தச் சட்டத்தை அமெரிக்கா கண்டித்துள் ளது. அமெரிக்காவின் இந்த கண்டனம் என்ன செய்யும் என்றால் எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாக அமையும்.கண்டனங்கள், ஆழ்ந்த அனுதாபங்கள், அதிர்ச்சிகள் அனைத்தும் சம்பிரதாயமானவை. இவற்றால் எதுவும் ஆகப் போவதில்லை. அதே நேரம் பாதிக்கப்படும் மக்களுக்கு இத்தகைய கண்டனங்கள் எத்தகைய விமோசனங்களையும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதும் தெரிந்த விடயமே.


அதிலும் இலங்கை தொடர்பில் உலக நாடுகள் விடுத்த கண்டனங்கள், கவலைகள், எச்சரிக்கை கள் அனைத்தும் செல்லுபடியற்றவையாகிப் போனதே உண்மை.

சில இடங்களில் கண்டனங்களை கேலிக் குரியனவையாக இலங்கை அரசு பரிகசித்த தும் உண்டு. அதில் ஐ.நா செயலாளர் பான் கீ மூனின் இலங்கை தொடர்பான கண்டன அறிக்கைகள் இலங்கையில் பரிகசிக்கப்பட்டன. ஐ.நா செயலாளர் என்பதற்கான அடிப்படைக் கெளரவங்கள் கூட அவருக்கு வழங்கப்படாமல் அவரைத் தனிப்பட்ட முறையில் அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்திருந்தார். ஆக, இலங்கை அரசைக் கண்டிக்க முற்பட்டு மூக்குடைந்துபோய் மெளனத்தைக் கடைப்பிடிக்கும் அளவிலேயே ஐ.நா செயலாளர் பான் கீ மூனின் நிலை உள்ளது.

சிறிய நாடான இலங்கையிடமே மூக்குடை யும் ஐ.நா. சபை தமிழ் மக்களின் விடயத்தில் ஏதேனும் செய்யுமென எதிர்பார்ப்பது மடமைத் தனம். இதற்கு மேலாக வன்னியில் இடம்பெற்ற யுத்தம், தமிழர்கள் அழிப்பு, சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னியிலிருந்தும், நாட்டி லிருந்தும் வெளியேற்றியமை, மூன்று இலட்சம் தமிழ் மக்களை முட்கம்பி வேலிக்குள் முடக்கி யமை என்ற நிகழ்ச்சிகளின் போதெல்லாம் உலக நாடுகள், சர்வதேச பொது அமைப்புக்கள் தமது கண்டனத்தை தெரிவித்தன.“ரோசம் கெட்டவன் ராசாவிலும் பெரியவன்” என்ற கொள்கையில் இருக்கும் இலங்கை அரசு இந்தக் கண்டனங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தன்பாட்டில் செயற்பட, கண்டித்த நாடுகள் வேலிக்குள் கிடந்து கூவும் செம்பகத்தின் பரிதாப நிலைக்கு ஆளாகின.

இப்போதும் அந்தக் கண்டனக் கலாசாரத் தையே உலக நாடுகள் தொடர்வது சிறிய நாடான இலங்கையிடம் தொடர்ந்தும் அவமானப்படுவதற் கேயன்றி வேறு எதற்குமானதல்ல. உலகமய மாதல் என்ற சூழமைவு இலங்கை போன்ற நாடுகளுக்கு வாய்ப்பாகிவிட்டதெனும் உண்மைக்குள், அந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை அரசு கனகச்சிதமாக பயன்படுத்தியுள்ள தென்ற மெய்ம்மையையும் நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.எனவே இலங்கை தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க முற்படுவதாக இருந்தால் அதற்கு கண்டனங் கள் வழியாக மாட்டா. மாறாக கண்டனங்களை குப்பையில் எறிந்துவிட்டு மாற்று வழிபற்றி சிந்திக்க வேண் டும். அப்போதுதான் முன்னைய கண்டனங்களும் அர்த்தமுடையவையாக உணரப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக