சனி, 20 பிப்ரவரி, 2010

கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினராகி விட்டனராம் ..

கொழும்பில் கடந்த இருபது வருடங்களில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு விட்டதாக அப்பட்டமான பொய் ஒன்றை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார். இருபது வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்தார்கள் என்றும் தற்போது 30 வீதமாகக் குறைந்து போய்விட்டனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் - 2001இல் இறுதியாக எடுக்கப்பட்ட சனத் தொகைக் கணக்கெடுப்பின் படி கொழும்பு மாவட்டத்தின் சனத் தொகை 2,251,274 ஆகும். இதில் சிங்களவர்கள் 1,724,459 பேர். இங்கு இலங்கைத் தமிழர்கள் 247,739 பேரும், இந்தியத் தமிழர்கள் 24,821 பேரும் முஸ்லிம்கள் 202,731 பேரும் வாழ்கின்றனர். இந்த நிலையில் - மகிந்த ராஜபக்ச கொழும்பில் சிங்களவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைந்து விட்டதாகத் தவறான புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிடும் கருத்தாகவும் இது அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக