திங்கள், 19 ஜூலை, 2010

யாழில் நடப்பது வேதனை தருகிறது ....

என் அன்பான யாழ்ப்பான சமுகமே ஒரு நிமிடம் திரும்பிப்பாருங்கள் வன்னிமாவட்டத்தை அது முழுத் தமிழீழ மண்ணுக்காக போராடி இன்று உருக்குலைந்து நிக்கின்றது ஆனால் தமிழீழம் விடுதலை பெற்று அங்கு ஒரு தமிழ் அரசு அமையும் போது.........
தமிழீழ மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் கடன் இருக்கின்றது என்பதை தெளிவாக பெற்றோர்கள் எடுத்து சொல்லவேண்டும் வன்னிமண் எங்களுக்காக இளந்தவைஎல்லாம் எமக்குக் கடன் தான் உயிர்களை திருப்பிக் கொடுக்க முடியாவிட்டாலும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா


இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கும் மனித நேயம் அற்ற செயல்கள் வன்னிமண்ணில் இருந்தும் கிழக்கில் இருந்தும் பல்கலைக்கழகம் வந்தவர்களின் நிலைமை அடிக்கடி இடமாற்ற அகதிவாழ்க்கை காரணம். வன்னி மாணவர்களோடு நான் பேசியபோது அவர்கள் சொன்ன பதில் மிகவும் வேதனையாக இருக்கின்றது வெளிமாவட்டத்தில் இருந்து வந்த மாணவர்களை வீடு தேவைஎன்று  எழுப்பிவிட்டு சிங்களவர்களுக்கு வீடு கூடிய வாடகைக்கு விடுகின்ற செயல் அநாகரிகமாக உள்ளது


காரணம் அவர்கள் சாதாரணமாக ஒரு வீட்டுக்கு 50000 ம் என்றால் 200000 ம் வரைமுர்ப்பணம் கொடுப்பதாகவும் மாத வாடகை 10000 ம் வரை கொடுப்பதாகவும் அதனால் எவர்கள் எமது உறவுகளை வெளியேற்றி விட்டு அவர்களுக்கு வீடு கொடுக்கப் படுவது நல்ல விடயம் இல்லை எனவே தயவு செய்து பணம் தான் வாழ்க்கை என்னும் மனப்பாங்கை மாற்றி என் யாழ்ப்பான சமுகத்தில் மாற்றம் வரவேண்டும்..............
எல்லோரையும் குறிப்பிடுவது சரியில்லை ஆனால் யார் யார் இப்படி நடந்துள்லிர்களோ அவர்கள் மனதில் மாற்றம் வரவேண்டும் எங்கள் வெளிமாவட்ட மாணவர்களின் எதிர்காலத்துக்கு உங்களின் மாற்றம் அவசியம்
தயவு செய்து என் வேண்டுகோளை யாரும் அரசியல் ஆக்க மாட்டீர்கள் என நான் நினைக்கின்றேன் காரணம் யாழ்ப்பான சமுகத்துக்கு கல்வியின் மதிப்பைப் பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அந்த உருமையோடு எங்கள் இளம்சநததிக்கு நீங்கள் ஒரு ஊன்றுகோலாக நிற்பீர்கள் என நாம் நம்புகின்றோம் ஏதேனும் பிழையிருப்பின் அதை மனதில் கொள்ளாமல்பொது சிந்தனையின் வெளிப்பாடு என எண்ணி மன்னிக்கவும்.
 இப்படிக்கு உங்கள் எங்கள் நலன் விரும்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக