திங்கள், 19 ஜூலை, 2010

நான் சும்மா அறிக்கை விட ---இவன் அழகபெருமா வேறை ...நானும் மகிந்தவும் போட்ட பிளான் தெரியாமல் உளறுகிறான்-மு .கருணாநிதி

இலங்கை தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையினால் இங்குள்ள நிலைமை தொடர்பில் ஆராய இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரை அனுப்ப வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
மேலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவானது உலகிலேயே தலைசிறந்த உறவாகும் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்---

தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனமாக செயற்பட்டு வருகின்றது.
எனவே இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் மூலம் கோரியிருந்தார். இது குறித்து கருத்துக் கேட்ட போதே அமைச்சர் டலஸ் அழகப் பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வும் உறவும் காணப்படுகின்றது
மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் கூட இந்தியா எமக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.
அதாவது நெருக்கடி மிக்க காலகட்டத்தில் இலங்கை தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இந்தியா ஒருபோதும் தடையாகவும் செயற்படவில்லை. எனவே இந்தியாவுடனான எமது உறவானது உலகில் வேறெந்த நாடுகளுக்கும் இடையில் காணப்படுவதையும் விட சிறந்த உறவாகும்.
இந்நிலையில் இலங்கை நிலைமை தொடர்பில் ஆராய இந்தியா சிறப்பு தூதுவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றே நாங்கள் கருதுகின்றோம்.
காரணம் தமிழ் மக்கள் தொடர்பில் எமது பொறுப்பை நாங்கள் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றோம். மீள் குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக் கிழக்கு அபிவிருத்தி என்பன தொடர்பில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.
எனவே சிறப்பு தூதுவர் ஒருவர் வருவதற்கான தேவையில்லை. அண்மையில் கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டத்தை அரசாங்கம் நடத்தியது. இதன் மூலம் ஜனாதிபதி சிறந்த சமிக்ஞை ஒன்றை வெளிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விரைவில் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கவுள்ளோம்.
அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவுள்ளோம். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலும் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக