திங்கள், 10 ஜனவரி, 2011

யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !! சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?

யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை விட்டு டக்ளஸ் குழுவும் இராணுவமும் இன்னமும் அகலவில்லை. இந்த சூழலில் இப்போ இராணுவம் சுபாஸ் ஹோட்டலை 15 ஆம் திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்போவதாக கூறியுள்ளது. இதே போல சிறிதர் தியேட்டரை டக்ளஸ் விட்டு விலகுவாரா???
இராணுவம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கீழ் வருமாறு கூறியுள்ளது.
இராணுவ 51வது படைப் பிரிவின் தலைமையகம் யாழ். நகரப்பகுதிக்கு வெளியே உள்ள இடத்துக்கு மாற்றப்படவிருப்பதாக யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். நகர மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்படவிருப்பதுடன், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் நேற்று யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, யாழ். நகரிப்பகுதியில் உள்ள இராணுவத்தின் முக்கிய தளமான 51வது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் சுபாஷ் ஹோட்டல் எதிர்வரும் பெப்ரவரி 26 திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் பகுதியிலுள்ள அனைத்து தனியார் கட்டடங்களும், கடைத்தொகுதிகளும் யாழ்ப்பாண மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக