ஞாயிறு, 30 மே, 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகத்திரை கிழிகிறது

கடைசியில் மெல்லமெல்ல தமது உண்மையான கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது வெளியிட்டுவருகிறது. அதாவது "வட கிழக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயார் எனில் தாம் அரசுடன் இணைந்து மகிந்த அரசை பாராளுமன்றில் 3ல் 2 பெரும் பான்மையாக்குவேன் என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
அப்படியாயின் அரசியல் சாசனத்தை திருத்தி,
தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என ஜயா சம்பந்தன் நம்புகிறார். அவர் அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதாக பல செய்திகள் ஏற்கனவே வந்திருந்தாலும், இத் தகவல் மூலம் அதை அவர் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்துள்ளார்.

தற்போது ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே நடைபெற்று வரும் இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பாக சில பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில், நடந்துவரும் ரகசியப் பேச்சுவார்த்தை பற்றி இதுவரை அவர் வாயே திறக்கவில்லை. பத்திரிகை நிருபர்கள் இது குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வா காலம் முதல் தமிழர்களை ஏமாற்றிவரும் இலங்கை அரசுடன் எச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் இணைந்து செல்ல முற்படவில்லை. மாறாக ஒரு பலம் பொருந்திய நிலையில் இருந்து பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்தனர், தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆனால் தமிழ் மக்களின் 30% ஆணையைப் பெற்று தாமே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசிடம் மண்டியிட இருப்பது, மொத்தத் தமிழினத்தையே தலைகுனியவைக்கும் செயலாகும்.

புலிகளை இலங்கை இராணுவம் யுத்தரீதியாக வென்றிருக்கலாம், ஆனால் எமது போராட்டத்தையோ , அல்லது விடுதலை குறித்து எரியும் நெருப்பையோ எவராலும் அணைத்துவிட முடியாது.

எஞ்சியுள்ள தமிழர்களின் மனதில் நிற்பது ஒன்றுதான், அது தமிழீழ தேசிய தலைமையும், அது விட்டுச் சென்ற போராட்டமும் தான் ! என்பதில் ஜயமில்லை.

2 கருத்துகள்:

  1. இங்கிருந்து சுகபோகங்களை அனுபவித்து கொண்டு அங்குள்ள மக்களை குழியில் தள்ளாதீர்கள்.அங்குள்ள மக்குளுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து இனிமேலாவது உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.
    தேசிய தலைவர் இருக்கும் வரை உயிருக்கு பயந்தீர்கள் .அங்குள்ள மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் தங்களுக்கு என்ன தேவை என்று .நீம்கள் அவர்கள் சொல்லுவதை முதலில் காது கொடுத்து கேளுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா31 மே, 2010 அன்று AM 6:49

    Ml kilah mq;Fs;s kf;fs; vg;gbalh Rfe;jpukhf jkJ fUj;ij Nrhy;yyhk; vz;L epief;fpd;wha;. ehq;fjhd;uh mth;fSf;fh Fuy; nfhf;fNtz;Lk; vlh. cd;idg; Nghiy cs;stq;fs; murhq;fj;J tf;fhsj;J Ntz;lhky; ,Ue;jhy; mJNt NghJd;uh.

    பதிலளிநீக்கு