செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வாருங்கள் பழகலாம் ?..........

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகையினைப் பெறுதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் உல்லாசபயணிகளின் வரவினை கூட்டுதல், வெளி நாட்டு முதலீடுகளை அதிகரித்தல் என்பனவே அண்மையில் வெளி நாட்டு அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. இதற்கேற்ப காய்களை நகர்த்துமாறு அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வகையில் தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு நாடுகளிலும் ஆட்பிடிப்பு நடவைக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த ஆட்பிடிப்பு உத்தியோக பூர்வமாகவும் மறைமுகமாகவும் நடக்கின்றன. புலம்பெயர் தமிழர்களிற்குள் ஆள ஊடுருவி நல்ல பிள்ளைகள் போல வேலைகளை செய்யும் சிலரை அணுகிய இலண்டனில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி கம்சா புலம்பெயர் மக்கள் சிலரை சந்திக்க எற்பாடு செய்து தருமாறு கூறியுள்ளார். அந்த வெள்ளை நண்பர்கள் தமிழர்களை கேட்டுக்கொண்டு திரிகின்றார்களாம்.

ஏன் சந்திக்க வேணும் என்று கேட்டால் வாருங்கள் சும்மா சந்திப்போம் என்பதுதான். ஆகவே புலம்பெயர் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதாவது புலம்பெயர் மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார போராட்டத்தில் மிகமுக்கியமாக இருக்கின்றார்கள் எம்மவர்களில் சிலர் அறியாவிட்டாலும் இலங்கை அரசு அதனை நன்கு பட்டறிந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகை பெறல், வெளி நாட்டு முதலீடுகளை பெறல் ஆகியவற்றுக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு தேவை என்ற வகையிலேயே இலங்கை அரசு தற்போது காய்களை நகர்த்துகின்றது.

ஆகவே இலங்கை தூதரங்கள் அல்லது அவர்களின் தூதர்கள் வாருங்கள் சும்மா கதைப்போம் என்றால் புலம்பெயர் மக்கள், அறிவாளிகள், வர்த்தகர்கள் உசாராக இருந்து காரியங்களை ஆற்றவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக