புதன், 23 ஜூன், 2010

விடுதலைபுலிகள் ஆதரவு என்ற போலியான 'கடிதத்தை' கையில் வைத்து கொண்டு மீண்டும் அறிக்கை!!

இரங்கற்பா எழுதியதும் நிஜம்.


முள்ளிவாய்க்கால் ஐயன் காலத்தில் நடந்தது நிஜம்.


மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றதும் நிஜம்.


அரசியல் ஞானம் இல்லை என்றதும் நிஜம்.



பார்வதி அம்மாளை விமானம் விட்டு கீழே இறக்காமல் அப்படியே அனுப்பியதும் நிஜம்.


பிறகு பத்துக் கட்டளைகளில் ஒன்றாக, தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளவர்கள், பார்வதி அம்மாள் ஒரு வேளை சென்னை வந்தால்,சந்திக்கக் கூடாது என்று சொன்னதும் நிஜம்.


மலேசியா அமைச்சர் ராமசாமியை , புலிகள் ஆதரவாளராக இருப்பதால், மாநாட்டிற்கு வரத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னதும் நிஜம்.


இன்று சிரஞ்சீவி மாஸ்டரைப் பிடித்து புழலில் விசாரிப்பதும் நிஜம்.அவர் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லியிருப்பதும் நிஜம்.


டெல்லி எடுத்த எல்லா முக்கிய முடிவுகளுக்கும் ஒப்புதல் அளித்ததும் நிஜம்.
அவர்கள் இவர் முன்னிலையிலேயே, அதுவும் சென்னையிலேயே அதைச் சொன்னதும் நிஜம்.


இவை எல்லாம் இவரது ஆட்சியில் தான் என்பதும் நிஜம்.


அப்படியே மீதமிருக்கும் , சிதறிக்கிடக்கும் புலிகள் இந்த மாநாட்டை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்திருந்தாலும், அது தமிழுக்காகத் தான்; ஐயனை நம்பியதாக அர்த்தம் ஆகாது என்பதும் நிஜம்.


இனியும் ஜெ..அதைச் சொன்னார் , இதைச் சொன்னார் என்பதெல்லாம் டுபாக்கூர் சமாச்சாரம்.


இவர் அதிகாரத்தில் இருக்கும் போது என்ன செய்வார், இல்லையென்றால் என்ன சொல்வார் என்பதை ஆராய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதும் நிஜம்


இனி, காந்தாரி, கூனி என ஒப்பாரி வைப்பது, காலத்துக்கு ஒவ்வாத வசனம்.


ஐயனுக்கு எப்போதுமே ராமாயண, மகாபாரத சிந்தனை தான்.
அதற்கு சொரணை மிக்க ஹிந்து என்கிற முறையில் நன்றிகள் பல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக