திங்கள், 7 ஜூன், 2010

பான் கி மூன் தமிழனை நாயிலும் கேவலமாக நினைக்கிறபடியால் 3 மாதமாகியும் .................

காஸாவுக்குச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்த விசாரணையை மேற்கொள்வது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் துருக்கிப் பிரதமர்களுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலந்தாலோசனை நடத்தியதாக ஐ.நா. தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது....
....இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு
தெரிவிக்கப்படும் போர் குற்றங்கள் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழுவை நியமிக்கப் போவதாக பான் கீ மூன் அறிவித்து இப்போது மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மோதலில் அதிகளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.


இதுவரை உறுதியளிக்கப்பட்ட நிபுணர் குழுவிற்கு ஒரு உறுப்பினரைக்கூட பான் கீ மூன் நியமித்திருக்கவில்லை.அல்லது அறிவிப்புக்கான விதிமுறைகள் பற்றியும் தெரிவித்திருக்கவில்லை என்று நியூயோர்க்கில் ஐ.நா.வை தளமாக கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.


இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல்லீ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது;


பொதுமக்களின் பகுதிகளிலிருந்து வாபஸ் பெற்றமை தொடர்பான ஐ.நா.வின் சொந்தப் பங்களிப்புத் தொடர்பாக சர்வதேச நெருக்கடிக்குழு தெரிவித்த குற்றச்சாட்டுகள் என்ன மாதிரியானவை என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டபோது, இந்தமாதிரியான சகல குற்றசாட்டுகளையும் தான் நிராகரிப்பதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.


சர்வதேச நெருக்கடிக்குழுவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜூன் 4 இல் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர்மட்டத்திடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.


கிளிநொச்சியிலிருந்து வெளியேறியமை, முகாம்களுக்கு நிதி உதவியளிக்கின்றமை, பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான அறிக்கையிடுவதை மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் நிறுத்திக்கொண்டமை தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது.


ஞாபகத்தில் இருப்பதை புரிந்துகொள்ளவேண்டிய தேவையின்றியே நியாயப்படுத்தும் கருத்தை ஹோம்ஸ் தெரிவித்தார்.சர்வதேச விசாரணை தேவைப்பட்டிருக்கவில்லை என்று கூறினார்.


கமெராவுக்கு அப்பால் ஆகஸ்ட்டின் இறுதியில் தான் விலகுவதாக ஹோம்ஸ் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக