செவ்வாய், 18 மே, 2010

தமிழ் மக்களின் சுதந்திரம் சாத்தியமானது - ராம் சே கிளாக்

115 பிரதி நிதிகளைக்கொண்ட நாடு கடந்த அரசாங்கத்தில் 85 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு கடந்த அரசாங்கத்தின் முதலாவது அங்குரார்ப்பண கூட்டம் அமெரிக்காவில் பிலேதெல்பியா நகரில் ஆரம்பமானது. தமிழீழ தேசிய கொடியுடன் ஆரம்பமான இந்த கூட்டம் மூன்று நாட்கள் இடம்பெறும் என கூறப்படுகின்றது. இதில் பிரதான பேச்சாளர்களாக பங்குபற்றிய அமெரிக்க முன் நாள் சட்ட மா அதிபர் பேசுகையில்;
 உங்கள் சுதந்திரம் சாத்தியமானது. உங்கள் வரலாற்றினை மறக்காதீர்கள்.உங்கள் பாதைகளை மறக்காதீர்கள். நீங்கள் கடுமையாக உழைக்கவேண்டும், நீங்கள் உங்கள் நியாயப்பாட்டினை நன்றாக எடுத்துக்கூறவேண்டும். உங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆகவே நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். உங்களுக்குள்ளேயே இருக்கும்வேறுபாடுகளை கழைந்து கொள்ளுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார். அமெரிக்கர்கள் ஒன்றாய் இருந்ததனால் அமெரிக்கா வென்றது. அதுபோலவே நீங்களும் இருக்கவேண்டும். பிரித்தாளும் சூட்சியினால் உங்கள் வெற்றி பறிக்கப்படும் ஆகவே ஒற்றுமையுடன் செயற்படுங்கள் என கூறினார். இந்த வைபவத்தில் கலந்து கொண்ட சூடானிய விடுதலை இயக்க அமெரிக்க பிரிவு தலைவர் டொமாஸ் வோல் ரூஸ் கருத்து கூறுகையில் எப்போதுமே போராட்டத்தின் விளைவு ஓர் இரவில் வந்து விடுவதில்லை. அதற்கு காலங்கள் வரயறுக்க முடியாது. தமிழர்களைப்பொறுத்தவரை உங்கள் பலம் புலம்பெயர் மக்கள் ஒற்றுமையுடன் போராடவேண்டும். சூடானிய விடுதலை இராணுவம் பெரும் படையணிகளை வைத்திருந்தும் இராணுவ ரீதியாக இன்னமும் வெல்ல முடியவில்லை ஆகவே ஒருங்கிணைந்த மக்கள் போராட்டமும் நீண்டகால செயற்பாடுகளும் அவசியம் என கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக