வியாழன், 6 மே, 2010

மானிப்பாயில் மாணவி ஒருவரைக் காணவில்லை

யாழ்ப்பாணம், மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள விவேகானந்தா வித்தியாசாலை மாணவியான பதினொரு வயதுச் சிறுமியை நேற்று நண்பகலுக்குப் பின்னர் காணவில்லை என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய், சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த நகுலேஸ்வரம் ரேணுகா (வயது 11) என்ற மாணவியே காணாமல் போனவராவார். இதுபற்றி கூறப்படுவதாவது: நேற்றுக்காலை பாடசாலைக்குச் சென்ற பிரஸ்தாப மாணவி, பாடசாலை நேரம் முடிந்தும் வீடு திரும்பாதததை அடுத்து தாயார் தேடிச் சென்றதாகவும் அவரைக் காணததையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யததாகவும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தையடுத்து பெரும் எண்ணிக்கையான படையினர் மானிப்பாய் பகுதியில் குவிக்கப்பட்டு நேற்றிரவு வரை தேடுதல் இடம்பெற்றது. சிறுமியின் தந்தை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டுச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் குடும்பம் வசதிகள் குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை தளபதி, இது போன்ற சம்பவங்களின் போது தமக்கு உடனடியாக தெரிவிக்குமாறும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இவ்வாறான கடத்தல், கொலை போன்ற சம்பவங்களால் தமக்கும் தமது கட்சிக்கும் சேறு பூசும் செயலாக அமைகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக