வியாழன், 1 ஜூலை, 2010

லண்டன் வெம்பிளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு லண்டன் நீதிமன்றம் 50 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

நிதிமோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வடக்கு லண்டன் வெம்பிளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு லண்டன் நீதிமன்றம் ஒன்று மொத்தமாக 50 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
தமிழ் குடும்பத்தை சேர்ந்த இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்களை நிதிமோசடி செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.



போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, பல வீடுகளை இவர்கள் அடைமானம் என்ற வகையில் கொள்வனவு செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இவர்கள், செய்த மோசடி நிதி முழுவதும் மீள வரி செலுத்தியவர்களுக்கு திருப்பி வழங்கவேண்டும் என வட லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இவர்கள் பல வாகனங்களுடன் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தார்கள் என தெரிவித்துள்ள நீதிமன்றம், இவர்கள் தமது நிதி மதிப்பை காட்டிலும் மேலதிகமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான சலுகைகளை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.


குற்றம் சுமத்தப்பட்ட எண்மர்களில் இருவர் மாத்திரம் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார்கள்.


ஏனையோர் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக