வியாழன், 1 ஜூலை, 2010

செய்திகள்


நாளை தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தை; பிள்ளையான் கலந்துகொள்ளவாரா?
-------------------------------------------
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று நாளை நடைபெறவுள்ளது.
எனினும், இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொள்ளமாட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கைலேஸ்வரராஜா கலந்து கொள்வார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்புக்கான பிரதான காரணம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொள்ள முடியாமையே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஐ.நா. நிபுணர் குழுவுக்கு அ.தி.மு.க செயலாளர் ஜெயலலிதா வரவேற்பு
----------------------------------
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை தாம் வரவேற்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள அவர்,  தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் அவரது அரசாங்கமும் இலங்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளன என்றும் கூறியுள்ளார்.


இந்நிலையில், உலக சமாதான பேரவையான ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளரும், அனைத்தையும் இழந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது » என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.


இலங்கை அரசாங்கம், குறித்த நிபுணர்கள் குழுவுக்கு விசா அனுமதிப்பத்திரன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக அந்த அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசாங்கம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


கே.பி.யை பாதுகாப்பதாக அரசாங்கத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை
--------------------------------
அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஒரு பயங்கரவாதியாவார்.


இந்நிலையில் கே.பி.க்கு எதிரான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ள அரசு, மாறாக அவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.


குமரன் பத்மநாதன் பல மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், ஏன் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார்.


இந்நிலையில், அரசாங்கம் குரமரன் பத்மநாதனுடன் இணைந்து கொண்டு, யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் ஒழுக்கத்தை சீர்குலைப்பதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.


இதேவேளை, அரசாங்கமானது குமரன் பத்மநாதனை சிறைச்சாலையில் தடுத்து வைக்கத் தவறியிருப்பதானது வெட்கப்படத்தக்க விடயம் எனவும் ஜெனரல் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக