திங்கள், 26 ஜூலை, 2010

உரிமைக்காக போராடி வென்ற வியட்னாம் எமது போராட்டத்தை புரியாமல் ....இலங்கையுடன் கூட்டு நடவடிக்கையாம் ...

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு வியட்நாம் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
 இது தொடர்பில் இலங்கை அரசு வியட்நாம் புலனாய்வுத்துறையினரிடம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அந்நாட்டு அரசு இலங்கையுடன் இணைந்து செயற்படு வதாக உறுதியளித்தது.


தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர் பில் இலங்கை அரசு, வியட்நாம் புலனாய்வுத் துறையிடம் ஒத்துழைப்புக் கோரியுள்ளது. பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன தலைமையிலான குழுவொன்றுக்கும் வியட் நாம் வெளியுறவு அமைச்சருக்குமிடையி லான சந்திப்பின்போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வியட்நாம் இணக்கம் வெளியிட்டுள் ளதாகவும் கூறப்படுகின்றது.


அத்துடன் இதன்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்பட்டமைக்கு வியட்நாம் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.


இதேவேளை வியட்நாமின் இலங்கைக் கான தூதரகம் மீண்டும் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பில் திறக்கப்படும் என லங்கா பிஸ்னஸ் ஒன் லைன் செய்தி வெளியிட்டுள்ளது.


இரு நாடுகளுக்குமிடையிலான 40 வருட இராஜதந்திர உறவுகளைப் புதுபிக்கும் நோக்கில் இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக