புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும்
அறிந்த ஒன்றே .அப் போராளிகுழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும்தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன் படுத்தி
வந்தனர்.
இக் குழுவில் யுத்தகளமுனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால்
கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்.இத் தருணத்தில் இராணுவத்தின் கட்டளைக்கு அடி பணியாத கொள்கையில் உறுதி
கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நய வஞ்சகமாக கொலை செய்து விட்டு,இது புலிகளுக்கும்

ஜி.எஸ் .பி வரி சலுகை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்தது. அதில் இலங்கை அரசாங்கமானது நீண்ட காலமாக இருந்து வரும் அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக விடுத்திருந்தது. இதை கருத்தில் கொண்டே மேற்கண்ட மணலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. அதாவது, இலங்கைத் தீவில் இன்னும் பயங்கர வாதம் ஒழியவில்லை ஆகையால் அவசர கால சட்டத்தை நீக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து உலக நாடுகளையும் நம்ப வைக்கும் ஒரு சதித் திட்டமாகும். அரசாங்கத்தின் இச்செயலானது அரச சார்பற்ற நிறுவனங்கல் மற்றும் ஊடகவியலாளர்களின் பிரசன்னம் மற்றும் செயல்பாடுகளை மட்டுறுத்தும் நோக்கமாகவே அறிய முடிகிறது. தமிழர்களுக்கெதிராக தமிழர்களைக் கொண்டே தமிழ் ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே ராஜபக்ஷே அரசாங்கத்தின் சாதுர்யமாகும்.
இச் செய்தியில் ஊகங்களின் படி ஆய்வுகள் நடாத்துவோர் பலர்.. புலிகளின் கடந்த கால கெரில்லா பாணியிலான தாக்குதலினை ஆய்வு செய்வோர். கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தல் வேண்டும். புலிகளின் ஆரம்ப வாழ்வே காடுகளுக்குள் தானே ஆரம்பித்தது, காடுதானே வாழ்வழித்து பல வெற்றிகளுக்கு வழிசமைத்தது..புலிகளின் அணிகள் பல தாக்குதல் அணிகளாக பிரிந்து சென்ற போது ஒரு,,சில அணிகளை அழித்த சிங்களம் வெற்றி தமதென கொண்டாடிய போதும் நாமும் நம்பினோம்,,,இப்போ நடப்பது என்ன எதை நம்புவது,,,துரோகிகளின் வேலை என்கின்றனர் சிலர்,,உண்மைதான் என்கின்றனர் பலர்,,,சிங்கள புலனாய்வின் வேலை என்கின்றனர் இன்னும் ஒரு குழுவினர்....அப்போ....காடுகளிற்க்குள் கெரில்லா தாக்குதலிற்காக சென்ற எம் சகோதரர்கள்,, எம் பிள்ளைகள்..எம் நண்பர்கள் யார்?.....யார்?.....
பதிலளிநீக்கு