செவ்வாய், 29 ஜூன், 2010

சந்திப்பு?!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அவசிய, அவசரப் பிரச்சினைகள் குறித்து தமிழ்க் கட்சிகள் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்க்கட் சிகளின் கூட்டம் ஒன்று நாளை மறுதினம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலை கூட்ட மைப்பின் செயலாளர் சிவாஜிலிங்கமும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த் தனும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம் பந்தனை நேரடியாகச் சந்தித்து கேட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள சம்பந்தனின் வீட் டில் நேற்றுமாலை 6 மணி முதல் 6.35 மணி வரை இச்சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் சித்தார்த்தன் மற்றும் சிவாஜிலிங்கம் கூடவே டக்ளஸ் அவர்களும் தொலைபேசியூடாக கலந்து கொண்டாராம்.


தமிழ் மக்களின் அரசியல் பிரச் சினைகள், உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளோம்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.
இன்று தமிழ் மக்கள் மீளக்குடியேற்றத்தில் பல்வேறு சிக்கல்களை, சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மற்றும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு மித்துக் குரல்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் இருவரும் சம்பந்தனிடம் தெரிவித்தனர்.


இந்தச் சந்திப்புக் குறித்து இரா. சம்பந்தன் பதில் அளிக்கையில் மேற்படி விடயங்கள் முக்கியமானவை. தமிழ்க் கட்சிகள் இவற்றுக்கு எதிராக அணி திரண்டு குரல் கொடுக்க வேண்டும். எனினும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி முடிவெடுக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக