வெள்ளி, 28 மே, 2010

ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான பங்களிப்பு அதிருப்தி தருகின்றது - மன்னிப்பு சபை

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பங்களிப்பு திருப்தி தருவனவாக இல்லை என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது இலங்கை விவகாரத்தில் ஐ.நா அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி தருகின்றது என சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் 111 நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. பலம்பொருந்திய நாடுகள் தங்களது சுயலாப அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.குறிப்பாக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஆற்ற வேண்டிய கடமைகளை தவறவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இஸ்ரேலினால் காஸா பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளக்கு எதிராக எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இடம்பெற்ற சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக