செவ்வாய், 9 மார்ச், 2010

மஹிந்தவுடனான புரிந்துணர்வில் எந்தவித முன்னேற்றமும் இல்லை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பான்கீமூனும், இலங்கை ஜனாதிபதியும் இணைந்து கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் தான் இலங்கை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியிருந்ததாகவும் பான்கீமூன் குறிப்பிட்டார். இந்தக் காரணத்திற்காக, அரசியல் விவகார பிரதிநிதி லியான் பெஸ்கோ இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களிடம், பான்கீ மூன் கூறினார். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான தொலைபேசி உரையாடலின்போது, வெளிப்படையாகவும், நேர்மையாகவும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகவும் அவர் கூறினார். அரசியல் மீள்கட்டுமாணம், இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலைமை ஆகியன குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் பான்கீமூன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக