செவ்வாய், 9 மார்ச், 2010

தமிழ்க் கூட்டமைப்பின் நிலைமை....

இரண்டு நாள் விஜயமாகக் கொழும்புக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், தமது பயணத்தை முடித்துக்கொண்டு புதுடில்லி திரும்பிவிட்டார். தமது கொழும்பு விஜயத்தின் போது இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உட்படப் பல தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்புகளில், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடு நடத்திய பேச்சுகளே முக்கியமானவையா கும். இந்தச் சந்திப்பு அர்த்தபுஷ்டியாகவும் திருப்தி தரும் விதத்திலும் அமைந்தது என்ற சாரப்பட வெளியில் செய்தி கள் தெரிவிக்கப்பட்டாலும், உண்மையில் இச்சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலத்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே தந்து நிற்கின்றது என்கின்றன உள்வீட் டுத் தகவல்கள். நேற்று முன்தினம் பிற்பகலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு முன்னர், நேற்றுமுன்தினம் காலை யில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நிருபமாராவ் சந்தித் திருந்தார். அந்தச் சந்திப்புத் தொடர்பாக இலங்கை ஜனாதி பதியின் அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பு நேற்று முன் தினம் பிற்பகலில் வெளியிடப்பட்ட சமயம், கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நிருபமாராவுடன் பேசிக்கொண்டிருந்தனர். அந்தச் செய்திக்குறிப்பில், வன்னி யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் அகதிகளை மீளக்குடியமர்த்துவதில் இலங்கை அரசு கண்ட வெற்றியை இந்திய வெளியுறவுச் செயலர் விதந்து பாராட்டினார் எனத் தெரிவிக்கப்பட்டி ருந்தது. தமிழ்க் கூட்டமைப்பினர், தாங்கள் நிருபமாராவைச் சந்தித்த சமயத்தில் இந்தச் செய்திக் குறிப்பின் விவரத்தை அறிந்திருக்காவிடினும், அப்படி இலங்கை அரசை மீள்குடி யேற்ற நடவடிக்கைக்காகப் பாராட்டும் தொனியில்தான் இலங்கை விஜயத்தின் போது நிருபமாராவ் நடந்துகொள் கின்றார் என்பதை முழுமையாக உணர்ந்திருந்தனர். மேற் படி சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் தரப்பில் கசிந்த தகவல் கள் அதனை உறுதிப்படுத்தின. * அகதிகள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் இலங்கை அரசு பண்ணும் பம்மாத்தை ஏற்றுப் பாராட்டுவது போல இந் திய வெளியுறவுச் செயலாளரின் கருத்துகள் அமைந்தி ருந்தன. * தமிழர் தாயகப் பகுதியில் வல்வந்தமான திட்ட மிடப்பட்ட சிங்களக் குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற இலங்கை அரசின் அடாவடித்தனங்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்தபோது, இன்னொரு இறையாண்மை உள்ள நாட்டின் மீது இந்தியா வின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டதே என்ற சாரப்பட விட்டேத்தியாக நிருபமாராவ் பதிலளித்தார். * இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் நீதியான, நியாயமான அதிகாரப் பரவலாக்கல் கட்ட மைப்பை இலங்கைத் தமிழருக்குப் பெற்றுக் கொடுப்ப தற்கு தனது சகல வலிமையையும் அழுத்தமாக இலங்கை ஆட்சியாளர்கள் மீது இந்தியா பிரயோகிக்கும் என்ற சமிஞ் ஞையை இச்சந்திப்பின்போது காட்டுவதற்கு நிருபமாராவ் தவறிவிட்டார். இப்படி இந்தச் சந்திப்பின் பெறுபேறுகள் தொடர்பில் அதிருப்தியான ஏமாற்றகரமான விசனமான கருத்து நிலைப்பாடு தமிழ்க் கூட்டமைப்புத் தரப்பில் பிரதிபலிக் கப்படுகின்றது. ""எது, எப்படியென்றாலும் விடயங்கள் வெளிவிவகாரச் செயலாளருடன் அடங்கிவிடுவதில்லை. அதற்கு அப்பா லும் மேலேயும் அதிகார வர்க்கங்கள், பதவி நிலைகள் உள்ளன. அந்தந்த மட்டங்களில் இதைக் கையாண்டு நிலை மையை எமக்குச் சார்பானதாக மீண்டும் மாற்றுவோம்.'' என்று நம்பிக்கை வெளியிடுகின்றார் தமிழ்க் கூட்டமைப் பின் மூத்த தலைவர் ஒருவர். ஆனால் இந்தியத் தரப்போ இச்சந்திப்புக் குறித்து வேறு விதமாகத் தகவல் வெளியிடுகின்றது. ""தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள், ஏதோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிவிட்டு நேரடியாக இந்தச் சந்திப் புக்கு வந்தவர்கள் போல உணர்ச்சிவசப்பட்டவர்களாக அங்கு உரையாடினார்கள். தீர்வுக்கான யோசனைத் திட்டம் குறித்து அதன் அடிப்படை குறித்து தமிழர் தரப்பிலி ருந்தே ஏதும் முன்வைக்கப்படவில்லை; பேசப்படவில்லை. அப்படியிருக்கையில் நாம் (இந்தியத் தரப்பு)அதுபற்றி எப் படிக் கருத்தை முன்னெடுக்க முடியும்? எது, எவ்வாறாயி னும் ஆட்சிப் பீடத்தில் இருக்கின்ற அரசுத் தரப்புடன் நேரடி விடயங்களில் ஈடுபட்டுத்தான் (உணஞ்ச்ஞ்ஞு) பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று இந்தியத் தரப்பு கோடி காட்டி யமை சில சமயங்களில் கூட்டமைப்புக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.'' என்று இந்தியத் தரப்பில் இப்போது சமாதானம் கூறப்படுகின்றது. மேற்படி சந்திப்பு தமிழ்க் கூட்டமைப்புக்குத் திருப்தி தராமல் முடிவுற்றமைக்கு யார் காரணம் அல்லது என்ன காரணம் என்பது இருந்து விட்டுப் போகட்டும். அது பிரச்சி னையல்ல. ஆனால், ஏற்கனவே இந்தியத் தரப்பின் எடுப்பார் கைப்பிள்ளையாக கைக்கூலியாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு கூட்டமைப்புக்கு எதிராக அண்மைக் காலத்தில் பரபரப்பாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்தச் சமயத்தில் இந்தியத் தரப்புடன் கூட்டமைப்பு நல்லுறவையும் இறுக்கமான பிடிப்பையும் தொடர்ந்து பேண வேண்டிய தேவை உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக