செவ்வாய், 25 மே, 2010

உலக நாடுகள் பல வழங்கிய அதிநவீன ஆயுதங்களே புலிகளைத் தோற்கடிக்க உதவியது-திவயின

புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக அரசபடையினர் மேற்கொண்டிருந்த வன்னி இராணுவ நடவடிக்கைகளிலும் அதன் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்கா, சீனா, இத்தாலி, கனடா, பாகிஸ்தான், பிரிட்டன், பல்கேரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு நவீன தொழில் நுட்பங்களைக்கொண்ட கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் உபகரணங்களை அரசு கொள்வனவு செய்திருந்தது.




இவ்வாறு மேற்படி நாடுகளிலுள்ள ஆயுத உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களிலிருந்து நவீன ஆயுதங்கள், உபகரணங்கள் கொண்டுவரப்பட்டதைப் புலிகள் இயக்க உளவுத்துறைத் தலைவர் எனக்கூறப்படும் பொட்டு அம்மானோ அல்லது அவருடைய ரொஸி உளவுப்பிரிவினரோ அறிந்திருக்கவில்லை.

இதற்குக் காரணம் பொட்டு அம்மானுக்கு தலைநகர் கொழும்பு மற்றும் பிரதேசங்களிலிருந்து அரச பாதுகாப்புத்துறையினர் மற்றும் அரச படைத்தரப்பினர் சம்பந்தப்பட்ட உளவுத்துதகவல்களை சேகரித்துவந்த புலிகள் இயக்கத்தினர் மற்றும் புலிகள் இயக்க ஆதரவாளர்களும் பாதுகாப்புத் தகவல்களை வெளிப்படுத்தி வந்த தமிழ் ஊடகங்கள் சிங்கள ஊடகங்களைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய ஊடகவியலாளர்கள் மற்றும் தகவல் சேகரிப்போரும் கிழக்கு இராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து புலிகள் இயக்கத்தினர் முற்றாக ஒழிக்கப்பட்ட கட்டங்களுக்குப் பின்னரும் வன்னி இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலும் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.

இதனால், இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது அரச படையினரால் தாக்குதலுக்காகப் பயன்படுத்திய நவீனமானதும் துல்லியமானதுமான ஆயுதங்கள் விமானங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களைப் பற்றி பொட்டு அம்மானின் ரொஸி உளவுப்பிரிவினருக்கு மேற்படி ஐக்கிய அமெரிக்கா பாகிஸ்தான்,சீனா, பிரிட்டன், பல்கேரியா, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்ததை அறியமுடியாமல் போய்விட்டது.

இவ்வாறு இறுதிக்கட்டத் தாக்குதலுக்காக வெற்றிகரமாகப் பயன்படுத்த அதிநவீன ஆயுதங்கள் உபகரணங்களில் 400 கிலோமீற்றர் நீண்ட தூரத்துக்குக் கடற்பரப்பு நடமாட்டங்களைக் காட்டிக்கொடுக்கும் அதிநவீன றாடர் இயந்திரங்கள் கனடாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டவையாகும். அனைத்துத் துறைமுகங்களையும் கண்காணிப்பு செய்யும் நவீன சோனார் கருவிகளும் மற்றும் இரவு நடமாட்டங்களைத் துல்லியமாகக் காட்டும் நவீன தொலைநோக்கி கருவிகளும் இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்டவை ஆகும்.

இவ்வாறு சிங்கப்பூரிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தன்னியக்க கிரனைட் வீசும் கனரகக்கருவிகள் கடற்படைகளின் தாக்குதல் பலத்தைப் பெருமளவில் அதிகரித்தது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட நவீன ஆயுதங்கள் கருவிகளுடன் இஸ்ரேல் வழங்கியிருந்த புளூ ஹொறிஸன் எனப்படும் அதிநவீன தேடுதல் விமானங்கள் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டன.

இறுதிக்கட்டத் தாக்குதலில்களின்போது புலிகள் இயக்கத் தலைவர்களின் நடவடிக்கைகள், நடமாட்டங்களைத் துல்லியமாக காட்டியவை இந்த புளூஹொறிஸன் விமானங்களே எனவும் இதைத்தொடர்ந்து புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் பிரதான அணியினர் நடமாடிய குறிப்பான பகுதிகள் மீது குறிதவறாத தாக்குதல்கள் வானத்திலிருந்து விமானங்கள் மூலம் தரையிலிருந்து இராணுவப்படைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு புலிகள் இயக்கத் தலைவர்களும் பிரதான அணியினரும் அழிக்கப்பட்டனர்.

குறித்த இஸ்ரேல் வழங்கிய புளூ ஹொறிஸன் தேடுதல் விமானங்கள் வெகு உயரத்திலிருந்து தரையில் காடு மற்றும் மறைவிடங்களில் நடமாடும் ஒரு தனி மனிதரையோ அல்லது ஒரு சைக்கிளைக் கூடத்துல்லியமாகக் காட்டிக்கொடுக்கும்.

இது செலுத்துனர் இல்லாத அதிநவீன தன்னியக்க விமானமாகும். வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் நடந்த இறுதிக்கட்டத் தாக்குதல்களின் போது புலிகள் இயக்கத் தலைவர்களின் அனைத்து நடமாட்டங்களை இந்த புளூ ஹொறிஸன் விமானங்கள் மூலமே விமானப்படையினரும் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் துல்லியமாக அறிந்துகொண்டு புலிகள் இயக்கத் தலைவர்கள் மீதான இறுதிக்கட்டத் தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

இதுபற்றி பாதுகாப்பு விமர்சகர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கேற்ப புலிகள் இயக்கத்தினருக்கு எதிரான அரசபடையினரில் பாரிய வெற்றிகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இவ்வாறு கடற்படையினரில் தாக்குதல் பலத்தை அதிகரித்தாகக் கருதப்படும் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட அதிசக்திவாய்ந்த கிரனைட் விசிறல் கருவிகளும் அவ்வாறே இறுதிக்கட்டத்தில் புலிகள் இயக்கத் தலைவர்களின் இறுதி நடமாட்டங்களைக் காட்டிக்கொடுத்த புளூ ஹொறிஸன் விமானங்களும் மற்றும் சீனா,பாகிஸ்தான்,ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பல்கேரியா, இத்தாலி, சிங்கப்பூர், இந்தியா மற்றும் நாடுகளும் வழங்கிய இராணுவ தாங்கிகள், சுடுகலன்கள், அதிநவீன இராணுவ கருவிகள் உபகரணங்களும் அரச படையினரின் வெற்றிகளுக்கு வழிகாட்டியுள்ளன என பாதுகாப்பு விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக