புதன், 18 ஆகஸ்ட், 2010

இராணுவத்தின் தொண்டர் படையணியில் கே.பி ?.

விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்த கே.பி என்ற குமரன் பத்மநாதனை இராணுவத்தின் தொண்டர் படையணியில் இணைந்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக "சதிமெத லங்கா" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நிர்வாகத்துறையுடன் சம்பந்தப்பட்ட கௌரவ பதவியை கே.பிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கே.பியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தேவையான அடிப்படையை உருவாக்குவதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது. இராணுவத்தின் தொண்டர் படையணியில் கே.பி இணைத்துக் கொள்ளப்பட்டாலும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை கொண்டிருக்க கே.பிக்கு தடைவிதிக்கப்பட மாட்டாது.
புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக கே.பியை வடமாகாண அபிவிருத்தித் திட்டங்ளுக்கு பொறுப்பானவராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு பிரிவுகளின் உட்த்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.பிக்கு இராணுவத்தில்  கேணல் என்ற பதவி நிலை வழங்கப்படவுள்ளதாகவும் இதற்கு இராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. கேணலாக நியமிக்கப்படுவர். படைப்பிரிவுகளின் தலைவராக வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் , இது ஆபத்தானது எனவும் இராணுவ உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் கேணல் தரத்தை விட குறைந்த தரம் கொண்ட பதவியை வழங்குவது குறித்து அரசாங்க பிரதிநிதிகள் கே.பியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அறியமுடிகிறது.

1 கருத்து: