திங்கள், 24 மே, 2010

1987 ஆம் ஆண்டின் உடன்படிக்கையை மீண்டும் அல்படுத்துக !


1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையை மீண்டும் அல்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா கோரியுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபை முறைகள் தொடர்பான செயல்முறைகளுக்கு வழிகோலப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இரண்டாகப் பிரிக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. வடகிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு சமமாக இந்திய -இலங்கை உடன்படிக்கையை அல்படுத்த வேண்டும் என்பது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் எண்ணமாகும் எனவும் இந்தியத் தலைமைகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தூதரக வட்டாரத் தகவல் மூலம் தெரியவருகிறது. வடக்கில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இந்திய அரசு பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளதால் இப்போது இந்தியா இலங்கை உடன்படிக்கையை அல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்து நிலவுவதாகத் தெரியவருகிறது. இந்தியாவின் இந்தக் கோரிக்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்னர் ஆரம்பக் கட்டம் பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொருட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அடுத்த வாரம் புதுடில்லி செல்லவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக