திங்கள், 24 மே, 2010

தடுக்குமா புலம்பெயர் தமிழர் சமூகம்?

நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து தற்போது பிரசல்ஸிற்கு விஜயம செய்துள்ள சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள், ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான ஆணையாளர் கிறிஸ்டலினா ஜோர்வியாவிடமே இலங்கை சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் விளக்கமளித்துள்ளார். போர் முடிவுறுத்தப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் கணிசமானளவு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமையை மேம்படுத்தும் நோக்கில் தேசிய திட்டமொன்று உருவாக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் பின் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை திருப்திகரமான முறையில் அமைந்துள்ளது எனவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் அங்கு முன்னேற்றமான நிலை காணப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் புலம் பெயர் தமிழர்கள், குறிப்பாக நாடுவாரியாக செயற்பட்டுவரும் தமிழ் அமைப்புக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் மீண்டும் ஜி.எஸ்.பி.பிளஸ் வழங்கப்ப்டும் நிலையை தடுக்க ஏதாவது செய்யுமா? மக்கள் தொடர்ந்தும் அவல வாழ்வுக்குள் தள்ளப்பட்டிருப்பதையும், தடுப்புமுகாம்கள் மூடப்படாது அங்கே இன்னும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலும், போராளிக்கைதிகள் போர்சட்டவிதிகளுக்கு முரணாக ஏங்கே என்றே தெரிவிக்காமல் 11000 ர்கும் அதிகமான போராளிக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதையும் ஆதாரங்களொடு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எடுத்துரைத்து இந்த ஜி.எஸ்.பி.+ ஐ தடுக்குமா தமிழர் அமைப்புக்கள்? போர்க்குற்ற ஆதாரங்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலும் இவ்வாறான முயற்சிகள் எடுக்காதுபோனால் அவை அந்த அமைப்புக்களை கேள்விக்குள்ளாக்குவதாகவே அமையும் என தமிழ்மக்கள் புலம்புகின்றனர். இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுவதாகக் கூறி இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தமையும், இந்த நிலையிலேயே, இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான உயர்மட்ட தூதுக் குழுவினர் கடந்த 19ஆம் திகதி பிரஸல்ஸிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

  1. பெயரில்லா24 மே, 2010 அன்று AM 6:38

    நாயிலும் கேவலமாக நக்கி பிழைக்க பிறந்த வேசி மக்களின் பிள்ளைகளே தேச துரோகிகளே .தன் இனத்தையும் காட்டிகொடுத்து மகிந்தவின் செருப்பு நக்கி நாயே . லகிலஸ் என்ற வம்பில பிறந்த நாயின் அடிவேருடிகளே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை இனிமேல் கடத்தல் அல்லது கொலை அல்லது எம் இனத்துக்கான வன்முறை தொடர்ந்தால் நாட்டில் மட்டும் அல்ல புலத்திலும் இனிமேல் களை பிடுங்குவோம் . இனிமேலும் உங்களின் அடாவடி தடம் தொடருமானால் புலத்திலும் ,களத்திலும் கருவறுக படுவீர்கள் .இது புலிகள் படை அல்ல அவர்களை புலி குட்டிகளின் படை .தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்

    பதிலளிநீக்கு