ஞாயிறு, 27 ஜூன், 2010

குடிவரவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் பிரித்தானியா!

குடிவரவினை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்குள் குடியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

குடியேற்றக்காரர்களின் வருகையினால் பிரித்தானிய சனத்தொகை சடுதியாக உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் குடியேற்றத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.
தொழில் வீசாக்களை கட்டுப்படுத்தல், திருமண சட்டங்களை கடுமையாக்குதல், மாணவர் வீசா வழங்குவதில் சட்ட திருத்தங்களை அறிமுகப்படுத்தல் போன்ற நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1990ம் ஆண்டுக்கு முன்னர் பிரித்தானியாவில் நிலவிய குடிவரவு நிலைமையை மீளவும் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மொத்த சனத்தொகை 2.7 மில்லியன் உயர்வடைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக