புதன், 29 செப்டம்பர், 2010

இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்க விருப்பம் கொள்ளாத தலைவர்கள்

ஐக்கிய நாடுகளின் 65-வது மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதியை உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்கவில்லை எனச் சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு இதுவரை காலமும் காணப் பட்ட நற்பெயருக்குத் தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையினால் நடத்தப்பட்ட விருந்துப சாரத்திற்கு 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் ஒரு நாட்டுத் தலைவரே இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மோசடியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈரானிய ஜனாதிபதி முஹமட் அஹமட் நிஜா டீன் மட்டுமே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
ஈரானிய அமைச்சரும் குறித்த வைபவத்தல் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்க  வில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் நட்புறவு நாடுகளெனத் தெரிவிக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் மற் றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலை வர்கள் இலங்கை ஒழுங்கு செய்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்காவில் வாழும் அரசாங்கத்துக்குச் சார்பான இலங்கையர்கள் பங்கேற்கும் ஓர் நிகழ்வாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு மாற்றமடைந்ததாகவும் கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்கு கூடுதல் நேரத்தைச் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்திப்பதற்கு இலங்கை கடுமையான முயற்சி மேற்கொண்டு இறுதியில் வெற்றியடைந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. பராக் ஒபாமாவின் உரையின் போது நிரம்பி வழிந்த சபை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ உரையாற்றிய போது பல இருக்கைகள் காலியாக இருந்ததெனக் குறித்த சிங்கள இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்குக் கூட பல அரச தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக