வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

பயங்கரவாத நாடுகள் பட்டியலில் வடகொரியா இல்லை : ஒபாமா

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியாவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க அதிபர் பராக ஒபாமா தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் எவை என்பது குறித்த அமெரிக்காவின் பட்டியலில் வடகொரியாவை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும் என அதிபர் பராக் ஒபாமாவை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அப்பட்டியலில் வடகொரியாவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க நாடா. உமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ஒபாமா தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 1987 ஆம் ஆண்டில் விமானம் ஒன்றை வடகொரியாவின் உளவு ஏஜெண்ட் குண்டு வைத்து தகர்த்ததில், அதில் பயணித்த 115 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 1988 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கூறிய பட்டியலில் வடகொரியா இடம் பெற்றது. ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த புஷ் அந்த பட்டியலிலிருந்து வடகொரியாவை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக