வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இலங்கையில் உண்மையான சுதந்திரம் இருக்கின்றதா?

இலங்கையின் சுதந்திரம் குறித்து மதகுருமார்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அதிருப்தி கொண்டிருப்பதாக Asia News தெரிவித்துள்ளது. இலங்கையின் 62வது சுதந்திர தின நிகழ்வுகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பகிஸ்கரித்துள்ள நிலையில், சுதந்திரம் என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் குறித்து மதகுருமார்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றவர்களிடம் Asia News கருத்துக் கேட்டுள்ளது. 'பேச்சுச் சுதந்திரம்' மற்றும் 'அனைவருக்கும் சமவுரிமை' போன்ற உரிமைகள் இல்லாவிடத்து 'என்ன சுதந்திரம்?' என இவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக Asia News தெரிவித்துள்ளது. 'ஒரு நபரின் அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் பேச்சுரிமைகளை உறுதிப்படுத்துவதே சுதந்திரம்' என வணக்கத்துக்குரிய மாடம்பஹம அசாகீ தேரோ (Madampagama Assagi Thero) தெரிவித்திருப்பதாக இச்செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது. 'இலங்கையில் உண்மையான சுதந்திரம் இருக்கின்றதா?' எனக் கேள்வி எழுப்பிய கத்தோலிக்க மதகுருவான ஷெல்டன் பெர்ணான்டோ, 'அனைவரும் சமமாக நடாத்தப்படுவதே சுதந்திரம்' எனக் குறிப்பிட்டுள்ளதுடன், இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் உண்மையான சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். 'தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அரசாங்கம் எப்படி நியாயமற்ற, வெட்கக்கேடான முறையில் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தது என்பதற்கு தாங்கள் அனைவரும் சாட்சியங்கள்' என Platform for Freedom என்ற அமைப்பைச் சேர்ந்த பெர்ணான்டோ பிரிட்டோ கூறியுள்ளார். போரின் வலிகளை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் நினைவு கூர்ந்ததாக தொவித்துள்ள Platform for Freedom, ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களின் மனங்களில் ஆழ்ந்த அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பில் வாழ்கின்ற கோபிதா என்ற பெண்மணி கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படமாட்டாது என சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக