வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

மீண்டும் மீண்டும் எழும்!

செந்தணல் எரியும் தேசத்தின் புதல்வர்களே செய்தி ஒன்று வரும் என்று காத்திருக்கும் காணகத்தின் நண்பர்களே! நிழல் எது நிஜம் எது தெரியாது தினம் தினம் வீசும் அறிக்கை வாளில் வெந்து நொகும் புலம் பெயர் உறவுகளே! சொந்தங்கள் நாங்கள் நெஞ்சத்தில் ஆயிரம் கனதியோடு பேசுகின்றோம் பெற்ற பிள்ளைகள் காணாமல் போனாலும் விட்டு வந்து ஊரை துறந்து நாம் இறத்தலே ஆகினும்...! நாம் நம் சொந்த மண்னை அடகு வையோம் சூரியத்தலைவனின் செந்தழல் விழிகாண விழிதிறந்து கிடக்கி்ன்றோம் மெய்யேன போனாலும் பொய்யேன ஆனாலும் தலைவன் அவன் ஒருவனே நம்பிக்கை! புது வழி செய்ய நீர் எந்த களம் புகிலும் நலம் காணப்போவது என்னவோ தலைவன் நாமத்தில் தான் வெற்றியோ கொண்ட எம் தலைவன் வீழ்ந்ததாய் எண்ணிடம் ஆகாது வேங்கை அவன் மீள்வது நிச்சயம் பொய்களால் ஆளும் பேதலிகளுக்காய் பேதை கொள்ளல் வேண்டாம் எமக்கு உறவுகளே! அறிக்கை போரால் அழிந்தவர் நாம் ஆயுதப்போரால் எழுந்தவர் நாம் மீண்டும் நாம் அறிக்கைக்குள் அள்ளுண்டு போகமல் இருந்திடல் அத்தனைக்கும் நன்மை செய்திடும் புலி பதுங்குமோ, பாயுமோ புன்னகைத்த படி கதை பேசும் புல்லர்கள் கதை முடித்து புறனானுற்றை படித்திட புலத்திலும் நிலத்தினும் எழுவோம்! புலி பாய்ந்ததா படுத்ததா கதைகளை விடுவோம் புலியின் பெயரால் தான் நாம் பூமியை ஆள்வது நிச்சயம் புன்னகைத்த படி நான் புளுகாங்கிதம் கொள்கின்றேன் மீண்டும் மீண்டும் எழும்! எம் தேசம்..,!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக