திங்கள், 6 டிசம்பர், 2010

கூட்டமைப்பின் இலண்டன் கிளை!

பல ஆயிரக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து இரத்தத்தால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தனது இலக்கினையும் தியாகிகளின் இலட்சியத்தினையும் புறந்தள்ளி விட்டு எதேச்சதிகாரத்துடனும் தன்னிச்சையான போக்குடனும் செயற்படுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.



இரத்தம் சிந்தி தியாகத்தால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இரத்த உறவுகளின் பங்கீட்டுப் பொருளாக மாறிவிட்டது. மஹிந்தர் ஆட்சியைக் குடும்ப ஆட்சி என்று கூறி கொக்கரித்தவர்கள் தமது கட்சியையே குடும்பக் கட்சியாக மாற்றியுள்ள வெட்கம் கெட்ட விவகாரங்களும் கூட்டமைப்புக்குள் இடம்பெற்றுள்ளன.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய கட்சிகளின் அனுமதி இல்லாமல் அனைத்துக் கட்சி ஆதரவாளர்களின் பிரசன்னம் இன்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் அங்கத்துவமே இல்லாமல் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரனின் சகோதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கையகப்படுத்தி உள்ளமையை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம்.


லண்டனில் பலராலும் அறியப்படும் மனோகரன் என்ற சுரேஸ் பிரேமசந்திரனின் சகோதரன் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனதாக்கி உள்ளார்.


கடந்த 18 , 19 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட இந்த விடயம் தொடர்பில் ஆராயப்படாத நிலையில் பிரித்தானியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை ஒன்று நிறுவப்பட்டு அதன் முழுப்பொறுப்பும் இன்று மனோகரனிடம் ஒப்புவிக்கப்ட்டுள்ளது.


பெயருக்காகச் சிலரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்படலாம் எனக் கருதப்பட்ட பிரபல தமிழ் ஊடகவியலாளர் தொடர்பிலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளாராம்.


குறிப்பிட்ட ஊடகவியலாளரை நிறுத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தன் கதி அதோ கதிதான் என்ற அச்சமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக