ஞாயிறு, 9 மே, 2010

என் இனிய ஈழத்து புலம்பெயர் உறவுகளே! உங்களிடமிருந்து ஒரு விடையத்தை அறிந்து தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்!…

உயிரினும் மேலான ஈழப்போராட்டத்தை, பயங்கரவாதமாகச்சித்தரித்து, உலக அரங்கில் தமிழருக்கு அவப்பெயர் உண்டாவதற்கும். பெருத்த பின்னடைவு உயிர் அழிவுகளுக்கும் எடுகோலாகி, உலகம் முழுவதையும் திசைதிருப்பி பெருத்த பிரச்சாரம் செய்து, வரலாற்றில் மறக்க முடியா வடுவையும் “வலியையும்” ஏற்படுத்தி, ஜீரணிக்க முடியாத கொடுமையான சதியை, திட்டமிட்டு தமிழர் மீது கொட்டி மண் போட்டவர்கள் எவர்?… இலங்கையுடன் சேர்ந்து இந்தியா என்ற சுயநலவாதிகள் தானே போராட்டத்தை பயங்கரவாதமென உலக நாடுகள் தடை விதிக்கவேண்டுமென ஆரம்பப் புள்ளியைப்போட்டு தலைவிரித்துக்கொண்டு ஆடியது!.. எது நடந்திருந்தாலும் சர்வதேசத் தூதர்கள் இடைவிடாமல் தேசியத் தலைமையுடன் தொடர்ந்தும் இராசதந்திர தொடர்புகளில் பேசிக்கொண்டுதானே இருந்தனர், புலிகள் பயங்கரவாதிகள் என்றால் இது எப்படிசாத்தியமானது?, எதையும் நியாயமாகவும் நேர்மையாகவும் எடுத்துக்கொள்ளாமல், ‘கொள்ளிக்கட்டையாக’ கோடரிக்காம்பாக’ நின்று அழித்தொழிக்க முயன்றது! முயலுவது!, யார்? இந்தியாதானே!,
கடைசியாக ஐ நா சபையில்.ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா, பிரன்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, இத்தாலி, கனடா, ஹொலண்ட், இன்னும் பலநாடுகள் சேர்ந்து கொண்டுவந்த பிரேரணையை, சீனா, பாக்கிஸ்தான், ரஷ்யா, ஈரன், பிரேசில், போன்ற நாடுகளை கூட்டி, பிரேரணைக்கு எதிராக செயல்ப்பட்டவர்கள் யார்? இந்த அழுக்குப்படிந்த இந்தியர்கள்தானே, (இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இந்திய இராணுவமும் இன அழிப்பில் ஈடுபட்டதால். என்ன விலை கொடுத்தாவது பிரேரணையை நிறைவேற்ற விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயம் அவர்களது தேவையாக இருந்தது), பதின் மூன்றாவது திருத்த சட்டமூலம், தமிழர்களுக்கு வாழ்வியல் சம்பந்தமாக எந்தளவுக்கு உதவும் என்று தெரியாது. தமிழர்களுக்கு அந்தச்சட்டமூலம் உறுதுணையாக இருக்குமென்றால் இந்தியா அதை வழிமொழிந்திருக்குமா?, உருப்படியில்லாத ஒரு உருப்படி, என்று தமிழர்களால் கருதப்படும். அந்தச்சட்ட மூலத்தையே 23, ஆண்டு கழிந்தும் இந்தியாவாலோ இலங்கையாலோ நடைமுறைப்படுத்த முடிந்திருக்கவில்லை,13வது திருத்தம் நாளை நாளை என்று இலங்கையும் இந்தியாவும் எத்தனை வருடமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றன, 1987ம் ஆண்டு ராஜீவ்”ஜெயவர்த்தன”ஒப்பந்தத்தில் தயாரித்து அமுலாக்க அறிமுக்ப்படுதப்பட்ட சட்டமூலத்தை, அமுலாக்க எது தடையாக இருக்கிறது, வரதராஜப்பெருமாளிடம் மாகாணசபையை கையளித்த போது. ஒரு துரும்பையாவது சுயமாகத்தூக்கிப்போடக்கூடிய வகையில் சாரத்துடன் மாகாண சபை வழங்கப்பட்டிருந்ததா?, 13வது திருத்தச்சட்டமூலம் என குறிக்கப்படும் பிரிவின் விரிவாக்கமும் உள்ளார்ந்த உரிமைப்பகிர்வுகளும் என்ன என்று எவ்வளவு பேருக்கு புரிந்திருகிறது? காவல்த்துறை, காணிப்பங்கீடு, கல்வி, போன்ற முக்கிய அதிகாரங்களை கையாள உரித்துடையவர்களாக தமிழர்கள் இருப்பார்கள், அதுவே போதும், என சட்டத்தை வரைந்தவர்கள் நினைத்திருந்தாலும், அதை நடைமுறைப்படுத்தியிருந்தாலே இவ்வளவு உயிர் பலியாகியிருக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டிருக்காது, சென்ற வாரம் இந்திய வெளியுறவு அமைச்சர் எம்.கிருஸ்ணா”திருவாய் மலர்ந்து 13வது திருத்தம் நிறைவேற்றப்படும் என வாய்ப்பாடு பாடியிருக்கிறார், அதே நேரம் ஸ்ரீலங்கவின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற டீ.எம்.ஜயரத்ன”அவர்களின் முதலாவது பாராளுமன்ற உரையையும் எல்லோரும் கவனித்தாகவேண்டும்!, ஸ்ரீலங்காவின் உள் விவகாரங்களில் எந்த நாட்டவரோ’ எந்த இனத்தவரோ’ தலையிட முடியாது, என அறுதியிட்டுக்கூறியிருக்கிறார், 2002ம் ஆண்டுபதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க 22/02/2002,நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன், விடுதலைப்புலி களுடன் செய்துகொண்ட ஒப்பந்ததில், வடக்கு,கிழக்கில், நிலைகொண்டுள்ள இராணுவத்தை திரும்பப்பெறுவதாக ஒப்புக்கொண்டு ஒப்பமிfட்டு இருந்தார், ஆனால் 2005 ரணிலின் காலம் முடியும் வரைக்கும் இரகசியமாக இராணுவபலத்தை கூட்டினாரே தவிர. ஒரு காவலரணைக்கூட அப்புறப்படுத்த அவர் அக்கறை காட்டவில்லை, தட்டிக்கழிப்பதும் ஏமாற்றுவதுமாகவே சிங்களவர்கள் இன்று வரை இருந்து வருகின்றனர், ஆனால் எல்லோருக்கும் ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்திருக்கிறது, போராட்டத்தின் போது போராட்டத்தோடு இணைந்து முள்ளிவாய்க்கால் வலைஞர்மடம்வரை சென்று, உயிர் தப்பி தடுப்புமுகாம்களில் இருப்பவர்களானாலும் சரி, வழி வழியே செத்து சகதியாகிப் போனவர்களானாலும் சரி, வெளிமாவட்டங்களில் வாய்திறக்கமுடியாத சூழலில் மெளனமாக வழ்ந்து கொண்டிருப்பவர்களானாலும் சரி, புலம்பெயர் நாடுகளில் வீதி வீதியாக தர்ம போராட்டங்கள் நடத்தி பெருத்த கிளர்ச்சியை உலக அரங்கில் உண்டு பண்ணியவர்களானாலும் சரி, எல்லோரும் புலிகளுக்கு ஆதரவானவர்கள், அல்லது விடுதலை போரட்டத்தில் மக்கள் அனைவருமே புலிகள்தான் என்ற மாபெரும் உண்மை எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறார்கள்!..,, புலிகள் பயங்கரவாதிகள் என்றால் இந்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவரும் பயங்கரவாதிகள்தானே! இன்று புலம் பெயர் நாடுகளில் போராட்டங்கள் பேரணிகள் ஊடகப்போராட்டங்களையும் நடாத்தி, நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதர்க்கான தேர்தலையும் நடத்திக்கொண்டிருக்கும் இவர்கள் யார்? இவை அனைத்திர்க்கும் விடை’ தமிழரென்றால் அது விடுதலைப்புலிகள், விடுதலைப்புலிகள் என்றால் அது தமிழர், என்பதை இடித்துரைத்திருக்கிறார்கள், (நான் எனது தனிப்பட்ட கருத்து ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன், ஈழத்தமிழர்கள் எழுந்தமானமாக ஒருவருடைய எடுப்புக்கு இலகுவில் எடுபடக்கூடியவர்களோ ஒத்துப்போகக்கூடியவர்களோ அல்ல, ஆனால் மாபெரும் ஆளுமைக்கு பாத்திரமான தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனமான போராட்டத்திலிருந்து மானமுள்ள ஒரு தமிழனையும் எந்தச்சக்தியாலும் பிரிக்க முடியாது, என்ற என் பணிவான யதார்த்தமான உண்மையை இங்கு சொல்லி வைக்கிறேன்,) 2002ம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு 22 ஆசனங்களைப்பெற்று பெரும் சக்தியாக திரண்டிருந்த எம்.பி.களை புலிகளின் பினாமிகள் என்று சிங்களவர்கள் விளித்துக்கொண்டதுண்டு, இது உலகம் அறிந்த உண்மையாகும், அந்தக்கூற்று உண்மையாகவும் இருக்கலாம், 1970 வதுகளுக்குப்பின் போரடும்பெரும் சக்தியாக உருவெடுத்த விடுதலைப்புலிகளை, ஒரு சில தனி மனிதர்கள் மட்டும் சுயநலம் காரணமாக இன்றுவரை மாறி மாறி வரும் அரசாங்கங்களுடன் இணைந்து, எதிர்த்து வருவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது, இதுகூட தமிழர்களூடே கருத்து வேற்றுமை இருப்பதாகக் காட்டிக்கொள்ள சிங்கள அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதி என்றுகூட கொள்ளலாம், இதற்க்கு பலியான தமிழர்கள் தாங்கள் பிழையான அணுகுமுறைக்குள் சிக்குண்டு விட்டோம் என்பது தெரிந்தும் அதிலிருந்து வெளிவரமுடியாத தடையை அவர்கள் ஆழமாக ஏற்படுத்தி விட்டபடியால், வேறு வழியின்றி அந்த வழியையே பின்தொடர வேண்டிய கட்டாயத்திற்குள் சிக்குண்டிருப்பதாக நம்பலாம், தாண்டி, சர்வதேசம் என்று பரவலாக எல்லோராலும் பிரயோகிக்கப்படும் வார்த்தை பிரயோகத்தில், ஒரு தடுமாற்றம் ஒரு மயக்கம் எனக்கும் இருக்கிறது, என் உறவுகளிடமும் அது இருப்பதாக ஒரு சந்தேகம் என்னுள் தொடர்ந்து கொண்டிருக்கிறது, ஐ நா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகப்பெரும் வல்லரசான அமெரிக்கா முதல் கடைசி சிறிய நாடான லக்க்ஷன் பேர்க்’ அல்லது அதிகமாக அறியப்படாத சிறிய நாடான புரூனே’ வரைக்கும் சேர்ந்த கூட்டுத்தானே சர்வதேசம், அல்லது ஐக்கிய நாடுகள் மன்றத்தைத்தான், சர்வதேசம் என்ற சொற்றொடர் குறிப்பிடுகிறதா, அதையும் தாண்டி நாங்கள் சர்வதேசம் எனக்குறிப்பிடுவது எங்களுடைய சிக்கலை தீர்க்கக்கூடிய தகுதியும் வல்லமையும் கொண்டதுமான, நீதியையும் சட்டத்தையும் மதித்து நடக்கக்கூடியவர்களான, கல்வி” அரசியல்’ பொருளாதரத்தில்’ தன்னிறைவு அடைந்து ஆயுத இராணுவ பலம் பொருந்தி இன்னும் ஒரு நாட்டை கட்டுப்படுத்தக்கூடியவர்களாக, இன்னும் குறிப்பாக மனித உரிமைகளை மதித்து நடக்கக்கூடிய பண்பு கொண்டவர்களான, ஐரோப்பா’ அமெரிக்கா’ கனடா’ அவுஸ்திரேலியா போன்ற நாட்டினரை குறிப்பிடுகிறோமா, என்ற சந்தேகம் என்னுள்ளே இருந்து கொண்டேயிருக்கிறது, எனது சந்தேகம் தப்பானது என்றாலும், யதார்த்தமாக இவர்கள்தானென்று சுட்டி பிரித்து காட்டாமல் நாகரீகமாக இந்த நாடுகளைத்தான் சர்வதேசம் என அழுத்துகின்றோம் என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை, ஒழுக்கம்’ கல்வி”அரசியல்நாகரீகம்’ பொருளாதாரம்’ மனித உரிமை’ போன்றவற்றில் இந்த நாடுகள் முன்னேறியிருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் இருக்கலாம், இங்கே குறிப்பிடக்கூடிய விடயம், சர்வதேச சதி” அல்லது சர்வதேசம் ஏமற்றிவிட்டது’ அல்லது சர்வதேசம் பாராமுகமாக இருக்கிறது என எங்களிடையே அதிருப்தி” ஆதங்கம்’ மேலோங்குவதை காணலாம் ‘நியாயமும் கூட, இந்த நேரத்தில் சர்வதேசம் என்று பொதுவாக கூறினாலும், சர்வ வல்லமை பொருந்திய தகுதி வாய்ந்த இந்த குறிப்பிட்ட நாடுகள் தீர்மானிக்கக்கூடிய சக்தி இருந்தும், பாராமுகமாக இருக்கின்றனவே என்ற ஆதங்கம் வயிற்றெரிச்சலாக வந்து மறைமுகமாக கொட்டித்தீர்ப்பதுமுண்டு, சம்பிரதாயத்திற்கு எதை வழிமொழிந்தாலும்,உண்மை எதுவென வெளிப்படுத்த முடியாத சங்கடங்கள் நிறையவே இருந்தாலும் பரவலாக எல்லா இன மக்களுக்கும் அந்த நாடுகளின் செயல்பாடுகளில் உள்ளூர ஒரு ஈர்ப்பும் ஒருவித நம்பிக்கையும் இருந்துகொண்டேதான் இருக்கிறது, ஒரு சமூகத்தில் அல்லது ஒரு கிராமத்தில் ஒரு சங்கடம் வந்துவிட்டதென்றால் அவற்றை தீர்க்கக்கூடிய ஒரு அதிகாரியை அல்லது அவ்வூரிலுள்ள நற்பண்புடன் சக்தி படைத்த ஒரு பெரிய மனிதரை அணுகி தீர்வு காண விளைவது இயல்பு, அது போன்றே நாடுகளூடே உருவாகும் பிணக்குகளை ஐநா அன்றி ஐரோப்பா,அமெரிக்கா,போன்ற மாற்றீடு காண தகுதியுடய நாடுகளை அணுகி புகார் செய்வதே சிக்கலைத்தீர்க்க சரியான முகாந்திரமெனெ சமூகங்கள் முனைப்புக்காட்டுவதுண்டு, அந்த வகையில் சர்வதேசம் எம்மை கைவிட்டுவிட்டதாக கவலை கொள்ளுகின்றோம்,குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளையே நொந்துகொள்ளுகின்றோம் என்பது உண்மை, அந்த கழ்ப்புணர்வு ஆதங்கம் நியாயமானது போல் தோன்றினாலும், சில நடைமுறைச்சிக்கல்கள் அவர்களுக்குமிருப்பதை ஏற்றுக்கொண்டும் ஆகவேண்டும் அவர்களுக்கும் இராசதந்திர ரீதியாக சில இடைஞ்சல்கள் இருக்கவும் கூடும், எது எப்படி இருந்தாலும் எங்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தவர்கள், எங்கள் நியாயத்தை புறந்தள்ளி விட்டிருந்தனர், இங்குதான் இந்தியாவின் வஞ்சகம் இராசதந்திரமாக சீனா.ரஷ்யா.பக்கிஸ்தான் போன்ற எதிரிகளை கூட கூட்டாளியாக்கியிருக்கிறது, அமெரிக்கா, ஐரோப்பாவை, மெளனம் சாதிக்க வைத்திருக்கிறது, இதைத்தான் நாங்களும் பாடமாக எடுத்துக்கொள்ளவெண்டும், நாங்கள் ஒரு சிறுபான்மை இனம், நாம் எவ்வளவு வீரமாக இருக்கின்றோம் என்பதிலும் பார்க்க எவ்வளவு விவேகமாக இருக்கின்றோம் என்பதே முக்கியமானது,, கிட்டாதாயின் வெட்டெனமற’ துட்டன் என்றால் தூரவிலகு’ இந்தப்பழமொழியை பின்பற்றி இந்தியாவுடன் எங்கள் உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும், 1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததாக கூறப்படுகிறது,1954/ 1955ல் ஒடுக்குமுறைகள் தொடங்கி மெல்லப்பு கைந்து 1958ல் கலவரமாக வெடித்து தமிழர்களின் உயிர் உடமைகள் அழிக்கப்பட்டது , சுதந்திரம் கிடைத்த ஏழு வருடங்களிலேயே பிரிவினைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது, கலவரங்களும் அழிப்புக்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது, (தமிழீழம் பிறக்கும்வரை இதுதொடரும்), 1970பது களின் பின் மக்கள் கொஞ்சங் கொஞ்சமாக வெளியேறி அகதிகளாக புலம் பெயரத்தொடங்கியிருந்தனர், அன்றே ஒரு அகதி தான் பாதுகாப்பாக வாழமுடியும் என நினைத்து புகலிடம் கோரியது, எங்கள் எதிர்மறை இனமான ஆரிய வெள்ளை இனத்தவரிடத்தில்தான்,ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நாடுகளைத்தான் நம்பிக்கையுடன் எமது உறவுகள் தெரிவு செய்திருந்தனர். பக்கத்திலுள்ள இந்தியா, பாக்கிஸ்தான்,வங்களாதேஷ், சீனா, ஈரான், ஈராஃக், எந்தநாட்டையும் எவரும் தெரிவு செய்யவில்லை, இன்றைக்கும் இந்த நிமிடமும் ஈழ அகதிகள் நம்பிக்கையுடன் ஒடிக்கொண்டிருப்பது அந்த நாடுகளை நோக்கித்தான், ”வாஸ்கொடகாமா” அமெரிக்க கண்டத்தை சென்றடைந்தபோது அங்கு ஆதிப்பழங்குடியினர் ஈட்டி அம்புடன் வாழ்ந்ததாகக்கூறப்படுகிறது. பிரித்தானியாவில் சமூகவிரோதிகள் இனங்காணப்பட்டு கப்பலேற்றி அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப்பட்ட போது, அங்கு வாழ்ந்த ஆதிவாசிகள் பறவைகளின் சிறகுகளை உடுத்தி குழை கொம்புகளை தலைக்கவசமாக்கி ”பூமராங்”என்ற ஆயுதத்தின் உதவியுடன் இன்றய இந்தியாவின் நரிக்குறவர்கள் போல வேட்டையாடிக்கொண்டு வழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன, அன்று ஆங்கிலேயர்கள் அமெரிக்காவை சென்றடையாமல் இருந்திருந்தால்!, துரதிஷ்டவசமாக ஆங்கிலேயர்கள் நாடுகடத்தப்பட்டு அவுஸ்திரேலியாவை சென்றடையாமல் இருந்திருந்தால்!, அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும், இந்தியாவைப் போல பக்கிஸ்தானைப்போல ஆப்கானிஸ்தானைபோல, தாடி, தலைப்பாகை, சகிதம் ஆடு மாடுகள்போல ஜமீந்தார்களின் அடிப்பொடிகளாகவும் சிற்றரசர்களின் சேவகர்களாகவும், பெண்கள் ஜமீன் மற்றும் சிற்றரசர்கள் அரசியல் வாதிகளின் போகப்பொருளாகவும் மீதமுள்ள மக்கள் காகம், ஓணான், நத்தை வகைகளை உணவாகக்கொண்டு நல்ல குடிநீர் கூட கிடைக்காமல் வாழ்வது போலல்லாமல் இருந்தாலும் ஒரு வேடுவர்களையொத்த சமூகம் அந்தநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும்., “போத்துக்கீசர்” “ஒல்லாந்தர்” “ஆங்கிலேயர்”இந்தியா; இலங்கைக்குள் நுழைந்திருக்காவிட்டால் ஏதாவது சொற்ப மனித அபிவிருத்தியாவது நிகழ்ந்திருக்குமா?. ஆங்கிலேயன் சுரண்டினான், ஆங்கிலேயன் அடிமைப்படுத்தினான்,ஆங்கிலேயன் சிறைப்படுத்தினான், என்று தரவு கூறும் வரலாற்று மோசடி ஆசாமிகள், வெள்ளைக்காரன் மனித நாகரீகத்தை அறிமுகப்படுத்தினான், ஆங்கிலேயன் கட்டடங்கள் நிர்மாணித்தான், ஆங்கிலேயன் கல்வி போதித்தான் நீர்நிலைகளை உருவாக்கினான், தெருக்களை அமைத்தான், போக்குவரத்து துரிதப்படுத்தினான், மோட்டார் வண்டி, புகையிரதத்தை அறிமுகப்படுத்தினான், நீதிமன்றங்களை நிர்மாணித்தான், என்ற ஒரு சில உண்மைகளையாவது பதிவு செய்திருக்கின்றனரா?.. இந்த நூற்றண்டிலேயே மனிதம் என்றால் என்னவென்று தெரியாத இந்திய’ இலங்கை’ ஈன அரசியல் வாதிகள், 1700/ 1800ம் ஆண்டுகளில் எவ்வளவு அபிவிருத்தி அடைந்தவர்களாக இருந்திருப்பார்கள்,என்பதை சிந்திக்க வேண்டாமா?,, அன்று வெள்ளையரின் ஒழுக்கத்துக்கு கட்டுப்படாமல் நிலப்பிரபுக்களாலும் கிளர்ச்சிக்காரர்களலும் தூண்டப்பட்டு முரண்டுபிடித்ததால், வெள்ளையரிடம் முறுகல் நிலை ஏற்பட்டு விரும்பத்தகாத சம்பவங்களும் நிகழ்ந்ததும் மறுப்பதற்கில்லை, அரசியல் வாதிகளுக்கும் ஜமீந்தார்களுக்கும் துதி பாடியே பழக்கப்பட்டு ஆமாங்கசாமி, சரீங்கசாமி, நல்லங்கசாமி, என்று வளர்க்கப்பட்ட அப்பாவி மக்கள், எஜமானர்களின் கூற்று தெய்வ வாக்கென நம்பி வெள்ளையர்களை புரிந்துகொள்ளாமல் முரண்டு பிடித்ததால் நீதி விசாரணைக்காக சிறைநிரப்பிய சம்பவங்களும் உண்டு (கண்டவர்களும் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஆங்கிலேயர் கடைப்பிடிக்கவில்லை இங்கிலாந்திலிருந்து நீதிபதி வரும் வரை சிறையிலிருக்க வேண்டிய கட்டாயம் அன்றும் இருந்திருக்கிறது) மில்லேனியம் என்றுகூறப்படும் இன்றய நவீனகாலத்தில் எங்கள்நாட்டில் என்ன நடக்கிறது? எந்தக்கேள்வியுமின்றி விசாரணை என்ற கதை ஏதுமின்றி வெட்டியும் சுட்டும் எறிந்துவிட்டல்லவா போகிறார்கள், 2009ல் தாயகம் எரிந்தபோது புலம்பெயர் உறவுகள் தெருவுக்கு வந்து தமது தேசிய அடையாளங்களை சுமந்து போராட்டம் நடாத்த அந்த புலம்பெயர் நாடுகள் ஒத்துக்கொண்டுதானே இருந்தன, அடக்குமுறையை கையிலெடுத்து அடக்க முற்பட்டதுண்டா, தொடர் போராட்டங்களுக்கு அனுமதித்துக்கொண்டுதானே இருந்தனர், நியாயத்தின்பால் அவர்களும் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்து கண்டனங்களும் கட்டளைகளும் தினம் தினம் வெளியிட்டுக்கொண்டுதானே இருந்தனர், தமிழரின் அழிப்புக்கு எதிராக எத்தனையோ தூதுவர்கள் சிங்களவனின் இடத்துக்கும் இந்தியனின் இடத்துக்கும் வந்து மாறி மாறி இந்த மரமண்டைகளுடன் பேசிக்கொண்டுதானே இருந்தனர், இங்கிலாந்தின் வெளியுறவுச்செயலர், டேவிட் மலிபண்ட்’டும் பிரான்ஸு வெளியுறவுச்செயலர், கவுச்னரும்’ நோர்வே அனுசரணையாளர், எரிக் சோல் ஹைம் அவர்களும் முடிந்தவரை ஆக்கபூர்வமாக தொடர்பில்தானே இருந்தனர். இலங்கை இந்திய கூட்டுத்திட்டமும் பிராந்திய ஆதிக்க சுயநலனுடன் சீனாவும் பாகிஸ்தானும் எவரது பேச்சுக்கும் மதிப்பளிக்கவில்லை, சில தவிர்க்க முடியாத சம்பவங்கள் புலம்பெயர்நாடுகளில் சட்டத்துக்குட்பட்டு எங்களை பாதித்திருப்பதும் மறுப்பதற்கில்லை, எங்களது தேவை எல்லாம் எங்களது உரிமை போராட்டத்தை தடையின்றி எடுத்துச்சென்று வென்றெடுப்பதே!, இதற்கு மேற்கத்திய புலம் பெயர் நாடுகளின் கரங்களை இறுகப் பற்றி எங்களுக்கு ”வலி”யைத்தந்தவனுக்கு இரட்டிப்பாக திருப்பிக்கொடுக்கவேண்டும் என்பதாகவே இருக்கட்டும், இன்று நாடு கடந்த ஈழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள் புலம்பெயர் தேசங்களான அமெரிக்க ஐரோப்பிய அவுஸ்திரேலிய மண்களில்தான் பிறந்திருக்கிறது, அது ஆரோக்கியமாக வளரவேண்டும், இப்போ கிடைத்திருக்கும் இந்த நற் சூழலை மிகவும் கவனமாக பயன்படுத்தி மேற்கத்திய அரசுகளுடனும் மக்களுடனும் இறுகக் கரம்பற்றி இடைவெளி இல்லாத அன்னியோன்யத்துடன் அறிவு பூர்வமாக சிந்தித்து வீரியமான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப உறுதி கொள்ளுவோம், பசுமையான பக்ரீறியாக்கள் படிந்த மண்ணில்த்தானே தாவரங்கள் செழித்து வளருகின்றன, கொடியவைரசுக்களும் நச்சு அமிலங்களும் குடிகொண்டிருந்தால், ஒன்றும் வளரமுடியாது மீறி ஏதாவது முளைவிடுமென்றால் அது பயங்கரமான நச்சுச்செடியாகத் தான் இருக்க முடியும், அந்தகொடிய வைரசுக்கள் குடிகொண்டிருக்கும் இடந்தான் இந்துமகா சமுத்திரத்தை சூழ்ந்துள்ள நாடுகள், அந்தக் கொடிய வைரசுக்களை பெருகப்பெருக அழித்துக்கொண்டு இருந்த எங்கள் மாபெரும் சக்திக்கு இப்போது சிறிய பின்னடைவு, ஆனாலும் புதிய உத்வேகத்துடன் எங்கள் சூரியன் விரைவில் தோன்றும், அப்போது பனிபோல் அந்த வைரசுக்களும் கூட்டுச்சேர்ந்த பங்கசுக்களும் காற்றோடு அல்லது கடலோடு காணாமல்போகும், அதுவரை மானமுள்ள ஒரு தமிழனும் உறங்கப்போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக