வெள்ளி, 14 மே, 2010

விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீடித்துள்ளது


தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான விதிக்கப்பட்டிருந்த தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு வருடக்காலத்திற்கு இன்று நீடித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழக மண்ணில் மீள ஒன்று சேர்வதாக கிடைத்த புலனாய்வு தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இலங்கையில் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்தில் அவர்கள், செயற்படுவது குறித்து அறிக்கை கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அகதிகள் என்ற போர்வையில் இந்திய மண்ணில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஊருடுவல் செய்வதை முற்றாக மறுக்கமுடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் முதன்முதலாக தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யப்பட்ட அமைப்பாக இந்திய அரசாங்கம் 1992 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அந்த தடை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது.

1 கருத்து:

  1. hello eelam people dont worry about potta India.... pakistankaran kusu vittaale payappadura thodanadunki India...ignore these bullshits...

    பதிலளிநீக்கு