புதன், 12 மே, 2010

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க.................

மீள்குடியேற்ற அமைச்சை ஒப்படைத்தால் அவர் மீள் வெளியேற்றம் செய்ய எத்தணிக்கின்றாரே!!! என்ற ஐயப்பாடு எழுகின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின் மூலம் புலிகளை ஒடுக்கியாகி விட்டுது, நாடுகடந்த அரசின் மூலம் தமிழர்களின் அரசியலையும் அபிலாஷைகளையும் புலத்தில் தள்ளியாகி விட்டுது,
முன்னாள் புலிகளின் பிரபல்யங்களை உள்ளே வைத்திருந்தால் அதன் காரணம் மீண்டும் அது அரசியல் மற்றும் கிளற்சிகள் என்று மாற்றங்களைக் கொணர்ந்தாலும் என்ற போக்கிலோ இவ்வாறான முயற்சிகைளை செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரதி அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டியது, மக்களின் அல்லது புலிகளின் ஆதரவாளர்களை கவர வேண்டுமென்றால், புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் அமரர் சு.ப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் அரசியல் புகலிடம் கோரவிருப்பதாக, வெளிவந்திருக்கும் செய்திக்குப் பதிலாக புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அமரர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்திற்கும் மற்றும் போராளிகளுக்கும் வாழ்வாதார வசதியையும், தகுந்த பாதுகாப்பையும் வழங்கி பெருமைப்படுத்தியிருக்க வேண்டுமேயொழிய, நாட்டைவிட்டு அதிலும் எமது ஈழத்தை விட்டு வெளியேற்றியாக வேண்டும் என்ற எண்ணம் பொருத்தமாகத் தெரியவில்லையே! இந்த கோரிக்கை குறிப்பிட்ட குடும்பத்தினருடையதாகவே இருக்கட்டும்… மனஉளைச்சலில் இருக்கும் தமிழர்கள் தற்போது எடுக்கும் முடிவில் தவறுகள் இருந்தாலும் இருக்கலாம் மகிழ்ச்சியில் இருப்பவர்கள் அவர்களுக்கு ஆறுதலும், ஆதரவாகவும், ஆலோசனையும் எதிர்காலத்தை எடுத்துரைப்பது அவசியமல்லவா!!! இந்தியாவில் புகலிடம் வழங்குவதற்குப்பதிலாக இலங்கை ஏன்அவர்களுக்கு “சிறப்பிடம்” வழங்கக்கூடாது?… “அவர்களுக்கு ஏன் சிறப்பிடம் வழங்க வேண்டும்…???” என்ற கேள்வியை தாங்கள் கேட்கலாம்!!!…. ஒன்றல்ல பல பேச்சுக்களில் இலங்கை அரசுடன் சமமாக மதிக்கப்பட்டு சமரசத்தில் பங்காற்றிய ஒரு தேசதூதுவனின் மனைவி பிள்ளைகள், போராட்டத்தில் தமிழர்களை அழித்த சரத்பொன்சேகாவின் மனைவியிலும் பிள்ளைகளிலும் மேலானவர்கள் அல்லவா? சரத்தை இலங்கை அரசு கைது செய்ததும் அவருடைய குடும்பம் புலத்தில் புகலிடம் கேட்பதற்குத் தகுந்த காரணங்கள் இருந்த போதிலும் அவர்கள் தேர்தலில் தம்மை ஈடுபடுத்தியிருக்கும் போது, இவர்கள் மட்டும் ஏன் நாடுவிட்டு நாடுசெல்ல வேண்டும். “இலங்கை அரசு தகுந்த முறையில் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை என்றே இந்த உரிமைப் போராட்டம் இடம்பெற்றது…” அவ்வாறான போராட்டத்தை மீண்டும் தொடராது அமைச்சராகிய தாங்கள் ஏன் அதற்கு ஆவண செய்யக்கூடாது? இலங்கை அரசு நினைவுத்தூபிகள் அமைப்பதற்குப் பதிலாக, அந்த நிதியில் ஏன் இவர்களுக்கு “நிலையான” வாழ்வை அளிக்கக்கூடாது? அந்தத்திட்டத்தை ஏன் அமரர் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது? இதே விடயம் தான் மதிப்பிற்குரிய பார்வதி அம்மாளுக்கும் நடந்ததே…!!! ஒரு பிரபல்யத்தை வைத்து அரசியல் செய்வதிலும் பல சிறப்பு வழிகள் இருக்கின்றனவே! இலங்கையின் சமாதானத்திற்காகவும் சிறுபான்மையினத்தின் உரிமைக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த பெயர் “தீவிரவாதிகள்”… ஆனால் அதன் சரியான அர்த்தத்தை அமைச்சரும் முன்னாள் தமிழீழ போராளியாகிய தாங்கள் அறியாததல்ல, எனவே புலிகளில் இருந்தோர் என்ற காரணத்தால் அவர்களை மாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்காது, தங்கள் இலங்கையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏன் அவர்களை தரமிக்க நிலைக்கு உயர்த்தக் கூடாது? கடந்த காலத்தில் தமிழக முதல் அமைச்சர், தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு இந்திய பிரஜாஉரிமை வழங்கப் போவதாக சொன்னதும் அதனை எதிர்த்த தாங்கள் எப்படி அந்த குடும்பத்தை அங்கு அனுப்ப ஆவண செய்யப் போவதாக தகவல் வெளிவந்தது?… பார்வதி அம்மாளை சிகிட்சைக்கே ஏற்காத இந்திய அரசு இவர்களை ஏற்குமா என்ற கேள்வி ஏன் எழவில்லை? இவரை வைத்து தமிழகத்தில் அரசியல் இடம்பெறாது என்று என்ன நிச்சயம்… என்று இந்தியா கேள்வி கேட்டால் அனுப்பப்படுகின்ற அந்தக்குடும்பம் அங்கும் இங்குமாக அங்கலாய்க்க நேரிடாதா? அமரர் தமிழ்ச்செல்வனை நோர்வே நன்கு அறியும் அந்த நோர்வேயின் அனுசரணையுடன் அவரை நோர்வே செல்ல அனுமதியை தாங்கள் பெற்றுக் கொடுத்தால், இந்தியாவில் வாழ்வதிலும் பார்க்க அவர் குடும்பம் மிகச்சிறப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழ வழியாக அமையாதா?… எனினும் தமிழ் மக்களின் கவனத்தை தாங்கள் இன்னும் ஈற்கத் தொடங்கவில்லை என்றே தெரிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக