புதன், 15 டிசம்பர், 2010

மகிந்த ஆப்பிழுத்த குரங்கானது எப்படி?- கலாநிதி விக்கிரபாகு கருணாரட்ணா

நவம்பர் ஏழாம் நாள் நான் பிரித்தானியாவிலிருந்து திரும்பியிருந்தேன். மகிந்த அரசாங்கத்தினால் நான் கைதுசெய்யப்படலாம் என நண்பர்கள் என்னை எச்சரித்திருந்தனர்.
ஆனால் இந்த ஆட்சியாளர் எனக்கென சிறப்பான ஒழுங்குகளைச் செய்திருந்தனர்.



வானூர்தி நிலையத்தின் ஊடாக நான் சென்றபோது எனக்கு எந்தத் தடங்கல்களும் ஏற்படுத்தப்படவில்லை. உண்மையினைக் கூறப்போனால் நான் வானூர்தி நிலையத்தினை விட்டு விரைவாக வெளியேவரும் வகையில் எனக்கான சோதனைகளையெல்லாம் அங்கிருந்த பணியாளர்கள் துரித கதியில் செய்து முடித்தனர்.


நான் வானூர்தி நிலையத்தினைவிட்டு வெளியேறிய கையோடு மகிந்தவின் ஆட்கள் என்மீது ஏவி விடப்பட்டனர்.


சட்டம் மற்றும் ஒழுங்குகளின் அடிப்படையில் தான் இந்த நாட்டினை ஆளவில்லை என்பதனை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் வகையில் மகிந்தர் செயற்பட்டிருக்கிறார். சட்ட ஒழுங்கு விதிகளால் அல்லாமல் அச்சுறுத்தலாலும் வன்முறையாலுமே இந்த நாடு ஆளப்படுகிறது.


கொழும்பு தெற்கு பகுதிக்குப் பொறுப்பான காவல்துறைப் பொறுப்பதிகாரியின் உதவியினை நான் நாடினேன். ஆனால் காவல்துறையினர் எனக்கு உதவுவதற்குப் பதிலாக எங்களுடன் பயணித்த இறுதி வாகனத்தின் மீதும் அதில் பயணித்தவர்கள் மீதும் குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடாத்துவதற்கு அவர்கள் தங்களது அதிகாரத்தினைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என நான் நம்புவதற்குக் காரணம் பல உண்டு.


நான் பயணித்த வாகனமும் கொழும்பிலிருந்து வந்திருந்த ஏனைய வாகனங்களும் புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட அதேநேரம் இறுதியாகப் பயணித்த வாகனம் வேண்டுமென்றே மறிக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக வந்த வாகனத்தில் பயணித்தவர்களைக் கொல்லுவதற்கு இவர்கள் முயற்சித்திருக்கக்கூடும். ஆனால் அந்த வாகனமும் மயிரிழையில் தப்பிவிட்டது.


புதுமையான நிகழ்வு


"காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்தபோதும், நவசமசமாசக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரத்தினவின் ஆதாரவாளர்களும் ஊடகவியலாளர்கள் சிலரும் கொழும்பு விமானநிலையத்தில் வைத்து குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்கள்" என புதமையான இந்த நிகழ்வு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.


இந்தச் சம்பவம் தொடர்பாக பிறிதொரு செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.


"கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பும் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த எம்.ரிவியின் கட்டுநாயக்க செய்தியாளரான பிறேம லால் மற்றும் லக்பிமநியூஸ் செய்தியாளரான சாந்த விஜயசூரிய ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களுள் நவசமாசமாசக் கட்சியின் உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், வர்த்த சம்மேளத்தினைச் சேர்ந்தவர்கள், சட்டவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரும் அடங்குகிறார்கள். பிரித்தானியாவிற்கான தனது பயணத்தின்போது கருணாரத்தின பல பொதுக்கூட்டங்களில் உரை நிகழ்த்தியிருந்தார்".


"நவம்பர் 27ம் நாளன்று பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழர் நினைவெழுச்சி நாள் நிழ்வில் பிரதான உரையினை நிகழ்த்தியவர்களில் விக்கிரமபாகுவும் ஒருவர். கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினவும் எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயலத் ஜெயவர்த்தனாவும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் இணைந்து அரச எதிர்ப்புப் போராட்டத்தினை ஒழுங்குசெய்திருந்தார்கள் எனச் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது".


மறுவளத்தில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பாக பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு இப்போது குற்றம் சுமத்த முடியாது என தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல கூறியிருந்தார்.


பிரித்தானியாவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை கலாநிதி வி.விக்கிரமபாகு முன்னெடுத்திருந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்களால் இதுபோன்ற தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார். "ஜெயலத் ஜெயவர்த்தனா மற்றும் விக்கிரமபாகு ஆகியோர் வெளிநாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான மேற்கொண்ட செயற்பாடுகளுக்காக தேவையேற்படுமிடத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்துவார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


காவல்துறையினரால் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்ட இறுதியாகப் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதுதான் உண்மை.


வேண்டுமென்று தாமதப்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டதுடன் மாத்திரம் நின்றுவிடாது காவல்துறையினர் வாக்குறுதி அளித்தைப் போல அந்த வாகனத்தினைப் பாதுகாக்கத்
தவறிவிட்டனர். 'லக்பிம நியூ'சினது ஊடகவியலாளர் சாந்த விஜயசேகர மற்றும் சிரசவினது கட்டுநாயக்கா வானூர்தி நிலையச் செய்தியாளர் பிறேம்லால் ஆகியவர்களே தாக்குதலைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து தலையில் காயமடைந்த சாந்த விஜயசூரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இலங்கைத் தீவின் ஆட்சியாளர் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளைத் தொhடர்ந்தும் மீறுவதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகிறன.


முறையான விசாரணை


தமிழ் பேசும் மக்கள் மற்றும் பிரித்தானியாவினைச் சேர்ந்தவர்கள் நடாத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாக எதிர்பாராத வகையில் லண்டனிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டமையினால் மகிந்த கோபமடைந்திருக்கலாம்.


பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பேதுமின்றி பெருங்கோபம் கொண்டிருந்த தமிழர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்தபோதும் லண்டனுக்குச் சென்றது விநோதமானது.


தனிப்பட்ட பயணமாக பரித்தானியாவிற்கு வந்திருந்த வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவருக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்க முடியாத நிலைக்கு பிரித்தானிய அரசாங்கம் தள்ளப்பட்டது. அத்துடன் லண்டனைப் பொறுத்தவரையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதும் தங்களது வெறுப்பினைக் காட்டுவதும் வழமையானதும் சட்டத்திற்கு உட்பட்டதுமாகும்.


இது தவிர போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் பிரித்தானியாவிற்குப் பயணம்செய்யுமிடத்து முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் பிரித்தானிய அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்படலாம்.


இருப்பினும் மகிந்த ராஜபக்ச ஒரு நாட்டினது தலைவர் என்ற உயர் பதவியில் இருப்பதானல் அவருக்கு எதிரான இதுபோன்ற முனைப்புக்கள் சாத்தியமற்றதாக மாறினாலும், அவருடன் பயணித்த படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கவே செய்தன. இவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த விடயங்கள்.


எவ்வாறிருப்பினும், அதிபர் ராஜபக்சவினை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் அவரது அமைச்சர்கள் தவறான ஆலோசனையினை வழங்கியிருக்கிறார்கள்.
இடம்பெற்ற இந்தச் சம்பவங்களை ஆழமாக ஆராயும்போது இந்த முடிவுக்குத்தான் என்னால் வரமுடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக