புதன், 15 டிசம்பர், 2010

புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிரூட்ட வெளிநாடுகள் பலவும் முயற்சிக்கின்றதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய குற்றம் சாட்டு

தற்போதைய நிலையில் முற்றாக முடக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் புலம்பெயர் சக்திகளை ஒன்று திரட்டி புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட பல வெளிநாடுகள் முயற்சிக்கின்றன என்று அவர் குறிப்பிடுகின்றார்.



கவசப்படையணியின் ஐம்பத்து ஐந்து வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.


என்னதான் வெளிநாட்டிலுள்ள புலி ஆதரவுச் சக்திகளை ஒன்று திரட்டி இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க யார் முயற்சித்தாலும் நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம்.


இலங்கையில் இன்னொரு தடவை பயங்கரவாதத்தின் நிழல் கூட தலையெடுக்க நாங்கள் வாய்ப்புகளை விட்டு வைக்க மாட்டோம்.


இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாகத் துடைத்தெறிந்ததை நிரந்தரமாக்கிக் கொள்வதாயின் இராணுவத்தினர் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். அதற்கென அபிவிருத்திப் பணிகளில் இராணுவத்தினர் தங்களாலான பங்களிப்பை நல்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக