திங்கள், 12 ஜூலை, 2010

இலங்கைக் கடற்படை அடியோடு மறுக்கிறது!

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் எது வும் நடத்தப்படவில்லை என இலங்கைக் கடற்படை அடியோடு மறுத்துள்ளது.
கச்சதீவுப் பிரதேச கடற்கரையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு மீன்பிடி நடவ டிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 மீனவர்கள் மீது
இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியிருக்கிறது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்தே, இலங்கைக் கடற்படை மறுப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச் சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண் ணமுள்ளன. அண்மையில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால் இந்திய நாகபட்டினத்தைச் சேர்ந்த மீனவரொருவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதோடு, முதல்வர் மு.கருணாநிதி மத்திய அரசுக்கு இதுசம்பந்தமாக உடனடி தீர்வு காணுமாறும் கடிதமொன்றை எழுதியிருந்தார்.
அத்துடன், இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என விசாகப்பட்டினம், தூத்துக்குடி கரையோரப் பாதுகாப்பு படையினரால் 20 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த 20 மீனவர்களையும், 12 மீனவப் படகுகளையும் இலங்கைக்குக் கொண்டுவர கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எது எப்படி இருப்பினும், இரு நாடுகளுக்குமிடையில் இந்தப் பிரச்சினை சூடு பிடித்ததையடுத்து, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கையிலிருந்து விசேட குழுவொன்று இந்தியா சென்று பேச்சு நடத்தவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக