திங்கள், 12 ஜூலை, 2010

புலம்பெயர்ந்து நாம் கண்டது ?

புலம்பெயர்தல் ஆக்கிரமிப்பின் முதல் படி படையெடுப்புகளின் வழிகாட்டி புலம்பெயர்தல் , ஆக்கிரமிப்பு, படையெடுப்பு, இம்மூன்றும் இந்த உலக மக்களை ஒரு விதத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப்பாதித்து வருகின்றன.
புலம்பெயர்தல், இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. இது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம்.


இது ஆண்டாண்டு காலமாக (மில்லியன்ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது) நிகழ்ந்து வரும் ஒன்றாகும். இதனால் மனிதன் பெற்றது ஏராளம்; அதே நேரத்தில் இழந்தது ஏராளம். பல பிரிவுகள் தோன்றியுள்ளன, ஏராளமான இனங்கள் அழிந்துள்ளன. அழிக்கப்பட்ட இனங்கள் மனிதன் மட்டுமே அல்ல. உலகமே காடாக; மனிதனும் விலங்குகளுடன் விலங்காக இருந்த சமயத்தில் இப்போதய விலங்குகளுடன் சண்டையிட்டு அவற்றை வெற்றிகரமாக அதனுடைய பகுதியிலிருந்து விரட்டி அடித்துள்ளான். இப்போதும் காடுகளில் வெட்டப்படும் ஒவ்வொரு மரமும், கட்டப்படும் ஒவ்வொரு வீடும் ஏதோ ஒரு இனத்தினை அழிக்க போடும் அடிக்கல்லே!.
புலம்பெயர்தலுக்குப் பல காரணங்கள் உள்ளன.
1. பொருளாதார ஆதாரமின்மை
2. இயற்கை சிற்றங்கள் அல்லது இயற்கை வளமின்மை 
3. அரசியல் காரணங்கள் (குறிப்பிட்ட மதம், சாதி, இன மக்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள்)
4. படையெடுப்பு
5. இன்னொரு நாட்டின் மேல் சொந்த விருப்பு. 
ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் தமிழன், அதிகமாக, பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து வருகிறான். புலம்பெயர்தல் இந்தக் காலத்தில் சாதாரணமாகி விட்டாலும், இதனால் பிற்காலத்தில் இழக்கப்போவதைப் பற்றி ....!இப்போதே நமக்கு தெரியாத பலவற்றை இழந்துவிட்டுத்தான் வெற்றிகரமாக, தமிழினமாக இங்கே வாழ்ந்து வருகிறோம். ஆனால், இந்த நிலையை அடைவதற்கு முன்பு நாம் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதற்கு வரலாற்றுப்பதிவு கிடையாது.  மொழி கல்தோன்றா முன்தோன்றா.. என்பதனை மறந்து அங்கிருந்து இங்கே வந்து வலவந்நை இழந்து இத்தகைய வாழ்வைப் பெற்றிருக்கலாம் வாழ்வு என்பது நம்முடைய மொழியாக, கலசாரமாக, செய்யும் தொழிலாக இருக்கலாம்.இவற்றில் முதல் இரண்டைத்ததான் இவ்வுலகில் எல்லோரும் கட்டிக் காக்க விரும்புவது. இரண்டிலுமே மொழிக்குத் தான் முதல் உரிமை. வெகு அரிதாகவே பரம்பதைத் தொழிலைக் காக்க சிலர் முயல்வதும் உண்டு. அது தவறு எனக் கூற வரவில்லை. மற்ற பழக்க வழக்கஙகளான கோபம், ஆத்திரம், வெறி, சிரிப்பு.... எல்லாம் பரிணாம வளர்ச்சியினால் (பரிணாம வளர்ச்சி என்பது சரியா தவறா எனத் தெரியவில்லை) பெற்றுக் கொள்ளும் மனிதன் முதலில் வாழ்வில் கற்றுக் கொள்வது ஒரு மொழியாக இருப்பதனால் அந்த ஆர்வத்திற்குக் காரணமாக இருக்கலாம். அதனால் தான் அதனை உயிர் உள்ளவரை மறக்காமல் காக்க விரும்புகின்றான்.
 ஒருவன் வேறு ஒரு நாட்டிற்குப் புலம்பெயர்கிறான் அவனுக்கு ஆரம்பத்தில் இந்த மூன்றுமே (மொழி, கலாச்சாரம், தொழில்) முக்கியமாகப் படலாம். ஆனால் தொழிலை சில ஆண்டுகளில் இழக்க வேண்டியதிருக்கும். கலாசாரம் அவன் உயிருடன் இரக்கும்வரை வாழ்ந்திருக்கும். மொழியினை அவன் அரும்பாடுபட்டு தன்னுடைய மகனுக்கோ, மகளுக்கோ கற்றுக் கொடுக்கலாம். ஆனாலும் அந்த மொழியையும் அவன் அடுத்த தலைமுறையிலோ அல்லது அதற்கு அடுத்தத் தலைமுறையிலோ இழக்க வேண்டியதிருக்கும். இது நிச்சயம்.
கலாசாரமும் மொழியும் காக்கப்படவேண்டுமானால், புலம்பெயர்தல் கூட்டமாக நடக்க வேண்டும். அப்போதும் கூட கலாசாரமும் மொழியும் ஓரளவிற்குத்த தான் காக்கப்படும். கலாசாரம் சில பத்தாண்டுகள் நிலைத்திருக்கலாம். மொழி வாழ்ந்திருக்கும்; ஆனால் பேச்சளவில் மட்டுமே. அரிதாகவே எழுத்தளவிலும் இருந்த மொழி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். அதற்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்க வேண்டும் அல்லது புலம் பெயர்ந்த நாடும் தொழில்நுட்பத்தில் சிறப்பாக வளர்ச்சியடைந்த நாடாக இருந்து, அந்த நாட்டு மக்களும் புலம் பெயர்ந்தவர்களிடைய மொழி, கலாசாரத்தை ஒரளவிற்காவது போற்றுபவர்காளக இருக்க வேண்டும் அல்லது புலம்பெயர்ந்த மக்கள் ஒடுக்கப்பட்டு எழுச்சியடைந்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக